அமைதி திரும்பும் நேரத்தில்.. மீண்டும் பதற்றம்! மணிப்பூர் பல்கலைக்கழகத்தில் குண்டு வெடிப்பு!
இம்பால்: மணிப்பூரில் பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் வெடித்த வன்முறை 10 மாதங்கள் கடந்த பின்னரும் அடங்கவில்லை. இதில் 180க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர், 1,108 பேர் படுகாயமடைந்துள்ளனர், 32 பேர் காணவில்லை. பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,036 தீவைப்பு வழக்குகள் பதிவாகியுள்ளன, வன்முறைகள் தொடர்பாக ஏறத்தாழ 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமாக சொல்லப்படும், அம்மாநில உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தல் சமீபத்தில் திரும்ப பெறப்படுவதாக அறவிக்கப்பட்டது. எனவே, வன்முறைகள் படிப்படியாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு, மணிப்பூரின் தனமஞ்சூரி பல்கலைக்கழக வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு ஒன்று வெடித்திருக்கிறது. இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்றிரவு சரியாக 9.35 மணியளவில் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க அலுவலகத்தில் இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. இந்த வெடிகுண்டு வெடிப்பு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications