நாட்டின் 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் வெறும் 24% தான் நீர் உள்ளது: பகீர் தகவல்
டெல்லி: வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் இருக்கும் நீரின் அளவு குறைந்து வெறும் 24 சதவீதம் தான் இருப்பு உள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் வெயில் தினமும் செஞ்சுரி அடித்து மக்களை கிளீன் போல்டாக்கி வருகிறது. ஏற்கனவே பருவ மழை பொய்த்துவிட்ட நிலையில் வெயிலின் உக்கிரத்தால் நாட்டில் உள்ள 91 முக்கிய நீர்த்தேக்கங்களில் இருக்கும் நீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது.

நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு 37.92 பில்லியன் க்யூபிக் மீட்டராக குறைந்துள்ளது. அதாவது நீர்த்தேக்கங்களில் வெறும் 24 சதவீதம் தான் நீர் உள்ளது. பொதுவாக ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில் பருவமழை பெய்து நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரும். ஆனால் இந்த ஆண்டு பருவமழை சரியாக பெய்யாததால் நீர் வரத்தும் குறைந்துவிட்டது.
இந்த 91 நீர்த்தேக்கங்களில் இருந்து தான் சாகுபடிக்கு நீர் திறந்துவிடப்படும். இந்நிலையில் நீர் இருப்பு குறைந்துள்ளது விவசாயிகளுக்கு கவலை அளித்துள்ளது. தமிழ்நாடு, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிஷா, குஜராத், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைவான அளவு நீர் உள்ளது.
ஆந்திரா மற்றும் திரிபுரா ஆகிய மாநில நீர்த்தேக்கங்களில் மட்டும் தான் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக நீர் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு கூடுதலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் ஜூன்-செப்டம்பர் வரையிலான காலத்தில் நல்ல மழை பெய்து இந்த நீர்த்தேக்கங்கள் நிறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications