முல்லை பெரியாறு அணை திறப்பு... 350 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!
இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டுள்ளது.
தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக்கூடிய முல்லை பெரியாறு அணையில், நீர்மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை தான் காரணம்.

இதனிடையே முல்லை பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியுள்ளது. முல்லை பெரியாறு அணை வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என கேரள அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி காலை 7 மணிக்கெல்லாம் கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஷி அகஸ்டின் மற்றும் கேரள வருவாய்த்துறை அமைச்சர் ராஜன் ஆகியோர் முல்லை பெரியாறு அணைக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அணையை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தனர். அணை திறக்கப்படுவதற்கு முன்னர் முதல் எச்சரிக்கை சங்கு காலை 7 மணிக்கும், இரண்டாவது எச்சரிக்கை சங்கு 7.15-க்கும், மூன்றாவது எச்சரிக்கை சங்கு 7.24-க்கும் ஒலிக்கவிடப்பட்டது.
முல்லை பெரியாறு அணையை திறப்பதற்கு முன்னதாக 350 குடும்பங்களை சேர்ந்த 1,079 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அதே போல் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 4,194 கன அடியாக உள்ளதால், பாதுகாப்பு கருதி அணையின் பின்புற மதகுகள் வழியாக விநாடிக்கு 2 ஆயிரத்து 344 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறில் திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீர் வல்லக்கடவு வழியாக இடுக்கு அணைக்கு சென்றடையவுள்ளது. இதனிடையே தமிழக நீர்வளத்துறை சார்பில், முல்லை பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகள் மூலம் விநாடிக்கு 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் மத்திய நீர்வளக் குழுமம் அளித்த மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அணையை தமிழக நீர்வளத்துறை கவனமாக இயக்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே முல்லை பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து கேரளாவில் பல்வேறு வதந்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications