Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்னூலில் 100 கோடியில் பங்களா! அரசு நிலத்தில் கட்சி ஆபீஸ்! வசமாக சிக்கிய ஜெகன்மோகன்!

Subscribe to Oneindia Tamil

கர்னூல்: ருஷிகொண்டாவில் 500 கோடி ரூபாய் செலவில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கட்டி வந்த பங்களா சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது கர்னூலில் 100 கோடி மதிப்பில் கட்சி அலுவலகத்தை அரசு நிலத்தில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி கட்டியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி வென்று ஆட்சியைப் பிடித்தது. கடந்த 5 ஆண்டுகள் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது.

YSRCP Jaganmohan Reddy

இவரது ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றிய செய்திகள் இப்போது ஒவ்வொன்றாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. அப்படித்தான் இப்போது அழகான கடற்கரையும் அதனையொட்டி உயரமான மலையும் கொண்ட பகுதி விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டாவில் ஆந்திர மாநில முன்னாள் ஜெகன்மோகன் ரெட்டி அரசு மிகப் பிரம்மாண்டமாக ஒரு சொகுசு பங்களாவைக் கட்டி வந்தது.

வெளி ஆட்கள் யாருமே இதுவரை உள்ளே நுழைய முடியாத அளவுக்கு இரும்புக் கோடையாக அந்தப் பகுதி இருந்து வந்தது. சமீபத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், தெலுங்கு தேசம் கட்சி அந்த பங்களாவின் புகைப்படங்களை சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து விமர்சனம் செய்திருந்தது.

அந்தப் பதிவில் ஆந்திர அரசு பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், இந்த ஆடம்பர பங்களா தேவைதானா எனக் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் ஜெகன்மோகன் ரெட்டி தங்க ரூ.500 கோடியில் மலை உச்சியில் இந்த அரண்மனையைக் கட்டி வந்ததாகக் குற்றஞ்சாட்டியது.

அதனைத் தொடர்ந்து ஜெகன்மோகன் தரப்பிலிருந்து பதிலடி கொடுக்கப்பட்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கனுமுரி ரவி சந்திர ரெட்டி, "இந்த பங்களா ஜெகன்மோகனின் தனிப்பட்ட சொத்து அல்ல. மேலும் அது அவருக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்படவும் இல்லை. இது அரசாங்க சொத்து. கட்டுமானம் நல்ல தரமாகத்தான் உள்ளது. முறைகேடுகள் அதில் இல்லை.

விசாகப்பட்டினம் தலைநகராக ஆகும்போது அங்கிருந்து அரசு செயல்படவே ருஷிகொண்டா அரண்மனையைக் கட்டிவந்தோம். இது ஆந்திர மாநிலத்தின் கட்டுமான கலையை எடுத்துக் காட்டும் வகையில் கட்டியுள்ளோம். குடியரசுத் தலைவரோ பிரதமரோ வரும்போது அவர்கள் தங்க இந்தப் பங்களா பயன்படும்" என்று கூறியுள்ளார்.
இந்த பிரச்சினைக்கு இடையில் இப்போது மற்றொரு விவகாரம் வெடித்துள்ளது. கர்னூலில் கட்டப்பட்டு வந்த மேலும் ஒரு அரண்மனை பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வராக ஜெகன் இருந்தபோது ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரமாக அமராவதி, விசாகப்பட்டினம், கர்னூல் ஆகிய நகரங்கள் செயல்படும் என்று அறிவித்திருந்தார்.

அப்படி இருந்தும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசை இந்த மூன்று தொகுதிகள் மக்களும் இந்தத் தேர்தலில் நிராகரித்துவிட்டனர். அந்தளவுக்கு இந்தக் கட்சியின் ஆட்சி பொதுமக்களிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. .

விசாகப்பட்டினத்தில் உள்ள ருஷிகொண்டா அரண்மனையின் காட்சிகள் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தலைவலியைக் கொடுத்து வரும் நிலையில், இப்போது ​​கர்னூலில் கட்டப்பட்டு வரும் மற்றொரு அரண்மனையின் பக்கம் ஊடகங்களின் கவனம் திரும்பியுள்ளது.

கர்னூல் ரயில் நிலையம் அருகே உள்ள ஐந்து சாலைகளின் சந்திப்பில், ஜெகன் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்ற போர்வையில் பிரமாண்டமான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள இந்தச் சொத்து, முதலில் ஆந்திர மாநில வேளாண் தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்திற்கு (AP Agros) சொந்தமானது எனக் கூறப்படுகிறது.

கடந்த 1979 ஆம் ஆண்டு உழவர் பயிற்சி மையத்திற்காக ஒதுக்கப்பட்ட இந்த நிலம் 3.40 ஏக்கர். இதில்தான் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2014 இல் ஏபி அக்ரோஸ் இந்த நிலத்தை காலியாக வைத்திருந்தது. அதன்பின்னர் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஒய்.எஸ்.ஆர்.சி.பி இந்த நிலத்தில் கர்னூல் நகராட்சியிடம் இருந்து தேவையான ஒப்புதல்கள் இல்லாமல், நகரத் திட்டமிடல் விதிமுறைகளை மீறி, கட்ட வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களைத் தவிர்த்து, தங்களது மாவட்ட கட்சி அலுவலகத்தைக் கட்டத் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது.

முறையான அங்கீகாரம் பெறாமல் இந்தக் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது ஒரு அப்பட்டமான முறைகேடாகும் என்று தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+