திருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்... போலீஸ் துப்பாக்கிச் சூடு
திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கடத்தல்காரர்கள் கல்வீசித் தாக்கியதால், போலீசார் வானத்தை நோக்கிச் சுட்டு அவர்களைக் கலைந்து போகச் செய்தனர்.
திருப்பதியை அடுத்த தீண்டக்குண்டா வனப்பகுதியில் 15 பேர் செம்மரம் கடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களைக் கைது செய்ய போலீசார் முயற்சித்துள்ளனர்.

அப்போது அவர்கள் போலீசாரிடம் இருந்து தப்பிக்க, அவர்களைக் கற்களை வீசித் தாக்கியுள்ளனர். இதனால், அவர்களை எச்சரிக்கும் வகையில் எஸ்.ஐ. விஜய் நரசிம்மலு தலைமையிலான போலீசார் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கிருந்து கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர். தற்போது அவர்களைப் பிடிக்க 6 பேர் கொண்ட இரு போலீசார் குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பி ஓடிய கடத்தல்காரர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து தகவல் இல்லை.
கடந்தாண்டு இதேபோல், ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சுட்டுக் கொன்றனர். அதனைத் தொடர்ந்து இது என்கவுண்டர் அல்ல திட்டமிடப்பட்ட கொலை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் இன்று நடந்த இந்த துப்பாக்கிச் சூடு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications