காற்று மாசை கட்டுப்படுத்த கார் கட்டுப்பாடு மட்டும் போதாது மிஸ்டர் கெஜ்ரிவால்
டெல்லி: கார் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நான்காவது நாளில் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
டெல்லியில் காற்று அளவுக்கு அதிகமாக மாசுபட்டுள்ளது. இந்நிலையில் மாசை குறைக்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளார். புத்தாண்டு அன்று அமலுக்கு வந்த கார் கட்டுப்பாட்டின் நான்காவது நாளான நேற்று டெல்லியில் காற்றில் மாசின் அளவு அதிகம் இருந்தது சோதனையில் தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் மாசை கட்டுப்படுத்த கார் கட்டுப்பாடு மட்டும் போதாது என்பது தெரிய வந்துள்ளது.

பைக்குகள்
காற்று மாசை குறைக்க இரு சக்கர வாகனங்களுக்கும் கட்டுப்பாடு, தூய்மையான பெட்ரோல், டீசல், டிரக்குகளுக்கு வேறு வழி, கட்டுமான இடங்களில் இருந்து வரும் தூசியை கட்டுப்படுத்துவது ஆகிய கூடுதல் நடவடிக்கைகளை வாக்குறுதி அளித்தது போன்று இன்னும் செய்யாமல் உள்ளது ஆம் ஆத்மி அரசு.

மக்கள்
கார் கட்டுப்பாட்டுக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். சிலர் கார் கட்டுப்பாட்டு விதிமுறை வெற்றி அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

மாசு
2007ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வில் டெல்லியில் காற்று அதிக அளவில் மாசு அடைவதற்கு சாலைகளில் எழும் தூசி 52 சதவீதமும், தொழிற்சாலைகள் 22 சதவீதமும், குப்பைகளை எரிப்பது 18 சதவீதமும் காரணம் என்று கண்டறியப்பட்டது. கார்கள் முதல் மூன்று இடங்களில் வரவே இல்லை.

போதாது
காற்று அதிக அளவில் மாசு அடைய வேறு காரணங்கள் இருக்கையில் கார்களுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிப்பது போதாது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications