மொபைல்போனில் ஆபாசப்படம் பார்த்து சிக்கிய அமைச்சர்.. தவறொன்றும் இல்லை காப்பாற்றும் சித்தராமையா
அரசு விழாவில் ஆபாசப் படம் பார்த்த கர்நாடக கல்வி அமைச்சர் தவறொன்றும் செய்ய வில்லை என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு: திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவில் ஆபாசப்படம் பார்த்த விவகாரம் தொடர்பாக கர்நாடக கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று பாஜக கோரி வருகிறது. அமைச்சர் தன்வீர் சேட் சிறுபான்மையினர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் பாஜக அவரை குறி வைத்து தாக்கி வருகிறது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் நகரில் அண்மையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற தொடக்கக் கல்வி அமைச்சர் தன்வீர் சேட் விழா மேடையில் இருந்தவாரே, செல்போனில் ஆபாச படங்களை பார்த்துள்ளார். இந்த காட்சி டிவி சேனல் வீடியோகிராபர்களால் படம் பிடிக்கப்பட்டு, ஒளிபரப்பப்பட்டது.

இதனையடுத்து, அம்மாநில எதிர்க்கட்சிகள் தன்வீர் சேட் பதவி விலக வேண்டும் என்று பாஜகவினர் கோரி வருகின்றனர். இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுதொடர்பாக அமைச்சர் தன்வீர் சேட்டிடம் விளக்கமும் கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அம்மாநில சட்டசபையில் இதுகுறித்த கேள்வியை எதிர்க்கட்சியினர் எழுப்பினர். அப்போது இதற்கு பதில் அளித்த சித்தராமையா, தன்வீர் சேட், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்தற்கான சான்று எதுவும் இல்லை என்றும், தன்வீர் சேட் ஒரு சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பாஜகவினர் அவரை குறி வைத்து தாக்கி வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
இதுகுறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, இந்த வழக்கு தொடர்பாக சிஐடி அறிக்கை வந்த பின்னரே, அவர் தவறு செய்தாரா என்பது தெரிய வரும். அதுவரை காத்திருப்போம் என்று கூறியுள்ளார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications