தெலுங்கானாவின் தாகத்தைத் தீர்த்த பிரகாஷ் ராஜ்.. தமிழகத்திற்கும் பாசம் காட்டலாமே!
சென்னை: தெலுங்கானாவில் உள்ள ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அந்தக் கிராமத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்து வைத்துள்ளார் ஏராளமான தமிழ் மற்றும் பிற தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ்.
தமிழ்ப் படங்கள்தான் பிரகாஷ் ராஜுக்கு இந்தியத் திரையுலகில் அவருக்கு நல்லதொரு அடையாளத்தைக் காட்டியது. திரை ரசிகர்களின் செல்லமாக அவரை மாற்றியது தமிழ் சினிமா ரசிகர்கள் கொடுத்து அன்பும், ஆதரவும்தான். இந்த நிலையில் தெலுங்கானாவில் ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து அதை சரி செய்து வருகிறார் பிரகாஷ் ராஜ்.

மெகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள கம்மடனம் என்ற கிராமத்தை பிரகாஷ் ராஜ் தத்தெடுத்துள்ளார். அங்கு குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து அந்தக் கிராமத்தினா் பிரச்சினைகளை சரி செய்ய களம் இறங்கினார் பிரகாஷ் ராஜ். கிராமத்திற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்ய ஆரம்பித்தார். குடிநீர்ப் பிரச்சினைதான் பெரிதாக இருந்தது என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்.
அங்கு கிணறுகள் தோண்டி மோட்டார் மூலம் குடிநீர் எடுத்து விநியோகிக்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். இதன் மூலம் அந்தக் கிராமத்தில் குடிநீர்ப் பிரச்சினை முழுமையாக தீர்ந்துள்ளதாம்.
தமிழகத்திலும் ஏதாவது ஒரு கிராமத்தை பிரகாஷ் ராஜ் தத்தெடுக்கலாமே.. நல்லது செய்யலாமே!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications