பாரிஸ் தீவிரவாதத் தாக்குதல் - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடும் கண்டனம்
டெல்லி: பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 150ஐ கடந்துள்ள நிலையில் இந்த கொடூர தாக்குதல்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பிரான்ஸ் நகரில் கிழக்குப்பகுதியில் பட்டாக்கிளன் என்ற கான்சர்ட் ஹாலுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதி, அங்கிருந்த பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார். இந்த திடீர் தாக்குதலால் பலர் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் பிணையக்கைதிகளாக இருந்த 100 பேர் உட்பட 160 க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அதே நேரத்தில் மத்திய பாரிஸ் நகரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த மற்றொரு தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் பலியாயினர்.
மேலும், பிரான்ஸ்-ஜெர்மனி இடையேயான கால்பந்து போட்டி நடந்து கொண்டிருந்த வடக்கு பாரிஸ் நகரில் உள்ள கால்பந்து மைதானத்தில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் நடந்தபோது அதே மைதானத்தில் அந்நாட்டின் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கால்பந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதல்களை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் திட்டமிட்டு அரங்கேற்றியதாக தெரியவந்துள்ளது.
Strongly condemn terrorist attacks in Paris, India stands firmly by France, my heart goes out to its people #PresidentMukherjee
— President of India (@RashtrapatiBhvn) November 14, 2015 இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள செய்தியில், "பாரிசில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு பலத்த கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். பிரான்சுடன் இந்தியா உறுதியாக, துணையாக நிற்கும். துயரகரமான இந்த வேளையில் எனது இதயம் பிரான்ஸ் மக்களுடன் இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications