For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.. இன்று ஆசிரியர் தினம்.. குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Prime Minister expressed their greetings for Teacher's day

    டெல்லி: இன்று ஆசிரியர் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளனர்.

    மாதா, பிதா, குரு, தெய்வம் என்றே முன்னோர்கள் உறவுகளை வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் மாதா, பிதாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பது குருவாகும்.

     President of India and Prime Minister expressed their greetings for Teachers day

    அதாவது பாடம் கற்பிக்கும் ஆசிரியராவார். இந்த பிரபஞ்சத்தை படைத்த கடவுளே ஆசிரியருக்கு அடுத்த இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். கடவுளை காட்டிலும் ஒரு படி மேலே போய் ஆசிரியரை கொண்டாட வேண்டும்.

    அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் (செப்டம்பர் 5) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. முதல் துணை குடியரசுத் தலைவராகவும் 2-ஆவது குடியரசுத் தலைவராகவும் இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள்தான் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் இன்று ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்தையொட்டி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் சிறந்த வழிகாட்டி, தனித்துவம்மிக்க ஆசிரியர் டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு இந்தியா மரியாதை செலுத்துகிறது என தெரிவித்துள்ளார்.

    குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மாணவர்களை நல்வழிப்படுத்தி ஊக்குவிப்பதன் மூலம் நாட்டை கட்டமைக்க ஆசிரியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துவதுடன் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர்.

    English summary
    President of India and Prime Minister expressed their greetings for Teacher's day which is being celebrated on today, Saravapalli Radhakrishnan's Birthday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X