மோடி காரை யாரும் தாக்கவில்லை.. உயிருக்கு ஆபத்து என கூறியது தப்பு! பஞ்சாப் விவசாயி கோல்டன் பேட்டி
அமிருதசரஸ்: டெல்லியில் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை தடுத்தார்களே, அதற்கு பதிலடியாகத்தான் நேற்று பஞ்சாபில் போராட்டம் நடந்தது என பஞ்சாப் விவசாயி கோல்டன் தெரிவித்தார்.
பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் விவசாயி கோல்டன், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட சென்ற போது சாலைகளில் அணி, கம்பி உள்ளிட்டவற்றை சாலைகளில் புதைத்தனர்.
எங்களை கூட விடாமல் தடுக்க எதை எதையோ செய்தனர். தற்போது பிரதமர் ஓராண்டு கழித்து முதல்முறையாக பஞ்சாப்பிற்கு வந்ததால் விவசாயிகள் அவர்களது எதிர்ப்பை காட்டினர்.

பஞ்சாப் அரசுக்கு தகவல்
பிரதமர் வந்தால் எதிர்ப்பு தெரிவிப்போம் என ஒரு வாரத்திற்கு முன்பே மாநில அரசுக்கு விவசாயிகள் தெரிவித்துவிட்டனர். கடந்த இரு தினங்களாக டிராக்டர்களை விவசாயிகள் கொண்டு வந்து குவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்த வான் வழியாக வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் சாலை மார்க்கமாக வந்துவிட்டார்.

பாலத்தை ஆக்கிரமித்த விவசாயிகள்
பஞ்சாப்பில் எப்போதும் போராட்டம் செய்வதென்றால் டோல் பிளாசா, பாலங்கள், ரயில் நிலையங்களைத்தான் தேர்வு செய்வர். பிரதமர் இந்த பாலத்தின் வழியாக வரவேண்டிய அவசியமே இல்லை. அவர் ராணுவ ஹெலிபேட் வழியாக வந்திருக்கலாம். மோசமான வானிலை காரணமாக விமான பயணம் ரத்து செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் நேற்று முன் தினம் இரவே விவசாயிகள் அந்த பாலத்தை டிராக்டருடன் ஆக்கிரமித்துவிட்டார்களே. எனவே விவசாயிகள் நிச்சயம் வழி மறிப்பர் என்பது உளவுத் துறைக்கு தெரிந்திருக்கும். அப்படியிருந்தும் சாலை மார்க்க பயணத்திற்கு வந்திருக்கிறார்கள்.

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி இல்லை என முதல்வர் சன்னி விளக்கியுள்ளார். அப்படியென்றால் எதற்காக போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்தார்? ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் முன்னர் வானிலையை சரிபார்த்துவிட்டுதான் செய்ய வேண்டும். ஆனால் பிரதமர் நிகழ்ச்சிக்கு அப்படி எதுவும் சரிபார்க்கப்படவில்லை. மழை நேரத்தில் மக்கள் எப்படி வருவார்கள்?

15 நிமிடங்கள்
பிரதமர் அங்கிருந்து நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டிய அவசியமே இல்லை. மாநில போலீஸாருடன் பேசியிருந்தால், அவர்களை விவசாயிகளை கலைத்திருப்பர். அப்படி ஒன்றுமே நடக்கவில்லை. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் எந்த வித ஒத்துழைப்பும் இல்லை. பிரதமரின் பாதையை தடுப்பது விவசாயிகளின் நோக்கம் இல்லை. அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் நோக்கம். எதிர்ப்பு தெரிவித்து 15 நிமிடம் அவரை நிறுத்திவிட்டார்கள். அதற்கு மேல் வேறு எந்த நோக்கமும் இல்லை.

விவசாயிகள் என்ன செய்தார்கள்
பதிண்டா விமான நிலையத்திற்கு உயிரோடு செல்ல அனுமதி அளித்ததற்கு நன்றி என பிரதமர் சொன்னது நிஜம்தான். அதை சொன்னதற்கு அர்த்தமே இல்லையே. அவரது வாகனத்தை அடித்தார்களா, நொறுக்கினார்களா. அப்படியிருக்கும்போது இப்படி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. உயிருக்கு ஆபத்து என்பதற்கும், வாகனத்தை தடுத்து நிறுத்தியதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஒரு அவரச நிலை பிரகடனத்தை கொண்டு வருவேன் என்பது போல் பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்கு ஒரு மெசேஜ் கொடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்தில் டெல்லியில் போராட்டம் நடத்திய உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. இதையெல்லாம் எப்படி பஞ்சாப் மக்கள் மறப்பார்கள்? இது மட்டுமல்ல பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் மக்களுக்கு பாஜக மீது கோபம் இருக்கும்.

சன்னி செய்தது என்ன?
பஞ்சாப் காங்கிரஸ் கட்சியிலிருந்து 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர். அது போல் இன்னும் 8 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த கோபம் எல்லாம் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி இருந்திருக்கலாம். அதனால் அவர் விவசாயிகளின் போராட்டம் குறித்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டார் என கோல்டன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications