டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி
டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்தார்.
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 18 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தமிழகத்தில கடுமையான வறட்சி நிலவியது. விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகின. இதனால் பாதிக்கப்பட்ட 250க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டும், மாரடைப்பு ஏற்பட்டும் உயிரிழந்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம்
தமிழக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், உடனடியாக நிவாரண உதவி வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 18 நாட்களாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசியல் கட்சியினர் ஆதரவு
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். தமிழக திமுக எம்பி திருச்சி சிவா, கனிமொழி, ஓபிஎஸ் அணி எம்பி மைத்ரேயன், தமிழக அமைச்சர் துரைக்கண்ணு, லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, ஜி.கே. வாசன், திருமாவளவன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ராகுல்காந்தி
விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரதமர் மோடி அறிவிக்கும் வரை போராட்டத்தை கைவிட்டு ஊர் திரும்ப மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

தரையில் அமர்ந்து போராட்டம்
தமிழக விவசாயிகளுடன் கீழே தரையில் அமர்ந்து ராகுல்காந்தி பேசினார். விவசாயிகள் அப்போது தங்களின் குறைகளை ராகுல்காந்தியிடம் தெரிவித்தனர். பச்சைக்கலர் துண்டு அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு போராட்ட களத்தில் ராகுல்காந்தி அமர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications