ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் கட்டாயம்?.. ரயில்வேத்துறை பரிசீலனை..
Subscribe to Oneindia Tamil
டெல்லி : ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் குறிப்பிடுவதை கட்டாயமாக்க ரயில்வேத்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் டிக்கெட் முன்பதிவில் இடைத்தரகர்களின் தலையீட்டை குறைக்க ரயில்வேத்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, ஆன்லைன் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி பதிவு செய்து பாஸ்வேர்டு பெறப்படுகிறது.

இந்நிலையில், ஆதார் எண்ணையும் டிக்கெட் முன்பதிவிற்கு கட்டாயமாக்க ரயில்வேத்துறை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், I.R.C.T.C. இணையதளத்தில் பதிவு செய்பவர்களின் முகவரியை ஆதார் எண் கொண்டு சோதித்து பார்க்க முடியும் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications