மோடிக்கு ராஜபக்சே வாழ்த்து, இலங்கைக்கு வருமாறு அழைப்பு
காந்திநகர்: இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் 21ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கிறது. இதையடுத்து நரேந்திர மோடி வரும் 21ம் தேதி நாட்டின் 14வது பிரதமராக பதவி ஏற்கிறார். மோடி தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.
பிரதமராக பதவியேற்கவிருக்கும் மோடிக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைபேசி மூலம் மோடியை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மோடியை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
மோடிக்கு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் உள்ள பாஜக அலுவலகங்களில் கட்சியினர் வெற்றியை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications