வீட்டுல கல்யாணத்துக்கு ஓகே.. பொய் சொல்லி பெண்ணை வீட்டிக்கு வரவழைத்து வன்புணர்வு செய்த எம்எல்ஏ
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார்.
ராஜஸ்தான் மாநிலம் கோகுண்டா சட்டசபை தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவர் பிரதாப் லால் பீல் (56). பாஜக எம்எல்ஏவான இவர் மீது மத்திய பிரதேச மாநிலம் நீமுச் பகுதியைச் சேர்ந்த 35 பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
அந்த பாலியல் வன்புணர்வு புகாரால் ராஜஸ்தான் மாநில அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது. இந்த புகாரில் எம்எல்ஏ தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்து கொள்வதாக கூறி உறுதி அளித்துவிட்டு பின்னர் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எம்எல்ஏ அறிமுகம்
மத்திய பிரதேச மாநிலத்தின் நீமுச் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பிரதாப் லால். அப்போது அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார். பின்னர் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

பிரச்சினை
நாளடைவில் தனது மனைவிக்கும் தனக்கும் இடையிலான பிரச்சினை குறித்து அவர் அவ்வப்போது அந்த பெண்ணிடம் கூறி வந்துள்ளார். பின்னர் அவரை விவாகரத்து செய்ய இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவரை போலவே அந்த பெண்ணிற்கும் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விவாகரத்து
இதையடுத்து திருமணம் செய்ய விரும்புவதாக எம்எல்ஏ தெரிவித்த போது அவர் மறுத்துள்ளார். எனினும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் எம்எல்ஏவை அவரது குடும்பத்தினரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள அந்த பெண் விரும்பினார். இதனிடையே தனது மனைவியிடமும் விவாகரத்தை எம்எல்ஏ பெற்றார்.

பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை
இந்த நிலையில் எம்எல்ஏ அந்த பெண்ணிடம் கடந்த நவம்பர் 8-ஆம் தேதி குடும்பத்தினரின் சம்மதத்தை பெற்றுவிட்டதாக கூறி உதய்பூரில் உள்ள அவரது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அப்போது அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்யாமலும் தனது போன் கால்களை எடுக்காமலும் எம்எல்ஏ உள்ளதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார். அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
வாட்ஸ்அப்பில் வந்த முத்தலாக்'.. குவைத்தில் இருந்து ராஜஸ்தான் பெண்ணுக்கு ஷாக் கொடுத்த கணவர் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications