ஆசிரியர் அடித்ததால் அவமானத்தில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை
ஜெய்பூர்: ராஜஸ்தானில் ஆசிரியர் அடித்ததால் அவமானத்தில் 16 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தில் உள்ள ராம்புரியா கிராமத்தைச் சேர்ந்தவர் தில்குஷ் சஹாரியா(14). அவர் பன்ஸ்துனி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டுப் பாடம் செய்யாமல் வந்த அவரை முகுத் பீகாரி என்ற ஆசிரியர் பிற மாணவர்கள் முன்பு அடித்துள்ளார். இதனால் அவமானம் அடைந்த சஹாரியா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முன்னதாக அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
முன்பு ஒரு முறை நான் வீட்டுப்பாடம் செய்யாதபோது என் ஆசிரியர் என்னை பார்த்து நீ எல்லாம் செத்தால் என் பாரம் குறையும் என்றார். நான் எப்பொழுது எல்லாம் வீட்டுப்பாடம் செய்யாமல் போகிறேனோ அப்போதெல்லாம் முகுத் ஜி என்னை அடித்தும், அவமானப்படுத்தியும் உள்ளார். இதனால் நான் தற்கொலை செய்யப் போகிறேன்.
போலீஸ் அங்கிள் அவருக்கு தண்டனை அளியுங்கள். அவரை மன்னித்துவிடாதீர்கள். இது தான் நான் உங்களை கேட்டுக் கொள்வது என்று அதில் தெரிவித்துள்ளார்.
சஹாரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக முகுத் பீகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு மாதத்திற்குள் ராஜஸ்தானில் நடந்துள்ள இரண்டாவது தற்கொலை இது. முன்னதாக வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் அடித்த அவமானம் தாங்க முடியாமல் 12 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications