'சிங்கம்'டா: சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட சர் ஜடேஜா
அகமதாபாத்: கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா கிர் தேசிய பூங்காவுக்கு சென்ற இடத்தில் ஜீப்பில் இருந்து இறங்கி சிங்கங்களுடன் புகைப்படம் எடுத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவும் கோஹ்லியை போன்று ஜிம்பாப்வே செல்லவில்லை. அண்மையில் திருமணான ஜடேஜா மனைவியுடன் நேரம் செலவிட்டு வருகிறார். கிரிக்கெட்டில் பிசியாக இருக்கும் அவருக்கு நண்பர்களை சந்திக்கவும் தற்போது தான் நேரம் கிடைத்துள்ளது.
இந்நிலையில் அவர் தனது மனைவி மற்றும் நண்பருடன் குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவிற்கு சென்றுள்ளார்.

ஜடேஜா
கிர் பூங்காவில் காட்டுக்குள் விலங்குகள் சுற்றித் திரியும் என்பதால் ஜீப்பில் செல்லும் பார்வையாளர்கள் வாகனத்தை விட்டு இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா விதிமுறையை மீறியுள்ளார்.

சிங்கம்
விதிமுறைகளை மீறி ஜீப்பில் இருந்து கீழே இறங்கிய ஜடேஜா காட்டில் ஹாயாக உட்கார்ந்திருந்த சிங்கங்களுக்கு அருகே நின்று புகைப்படம் எடுத்தார். எடுத்தவர் சும்மா இல்லாமல் அதை ஃபேஸ்புக்கில் போட்டுவிட்டார். அதுவும் குடும்ப புகைப்படம் என்று தலைப்பு வேறு.

வனத்துறை விசாரணை
ஜடேஜா விதிகளை மீறி ஜீப்பில் இருந்து இறங்கி வனவிலங்குகளுடன் புகைப்படம் எடுத்தது குறித்து குஜராத் மாநில வனத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்ச்சை
முன்னதாக ஜடேஜாவின் திருமணத்தின்போது மகிழ்ச்சியை தெரிவிக்க அவரது உறவினர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீசார் வந்து எச்சரித்துவிட்டு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications