இடைக்கால பட்ஜெட்: அரிசிக்கான சேவை வரி ரத்து! பாதுகாப்பு துறைக்கு ரூ2.25 லட்சம் கோடி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அரிசிக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு துறைக்கு 10% கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் கோதுமைக்கு விலக்கு அளித்து விட்டு அரிசிக்கு மட்டும் சேவை வரி விதித்தது.இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுமே அரிசிக்கான சேவை வரியை ரத்து செய்ய வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் இன்று ப.சிதம்பரம் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அரிசிக்கான சேவை வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

tax

இடைக்கால பட்ஜெட்டின் இதர அம்சங்கள்:

எங்கள் சாதனைகளுக்குக் காரணம் கடும் உழைப்பு தான். எனக்கு கடும் உழைப்பை போதித்தவர்கள் என் தாயாரும், ஹாவர்டும்தான். நாங்கள் வளர்ச்சியைக் காட்டவில்லை என்பது பொய் பிரச்சாரம். எங்களது 10 ஆண்டு கால சாதனையை வரலாறு தீர்மானிக்கும்.

10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுபான்மையினரில் 14 லட்சம் பேர்தான் வங்கி கணக்கு வைத்திருந்தனர்.. தற்போது 42 லட்சம் சிறுபான்மையினர் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர்.

ரயில்வே துறைக்கு மத்திய பட்ஜெட்டில் இருந்து ரூ. 29,000 கோடி கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படுகிறது. உணவு, எரிபொருள், உரங்களுக்கான மானியமாக ரூ. 2.46 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 57 கோடி பேருக்கு இதுவரை ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஆயுத போலீஸ் படையை வலுப்படுத்த ரூ11,009 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நாட்டில் 7 புதிய விமான நிலையங்கள் உருவாக்கப்படும்.

10 ஆண்டுகளுக்கு முன் சுகாதாரத்துறைக்கு ரூ. 7,248 கோடி ஒதுக்கப்பட்டது. கடந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ரூ. 36,400 கோடி ஒதுக்கினோம்.

வடகிழக்கு மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ1,200 கோடி ஒதுக்கப்படும். பாதுகாப்பு துறைக்கு முந்தைய ஆண்டை விட கூடுதலாக 10% நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதாவது பாதுகாப்பு துறைக்கு ரூ2.25 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது.

நாட்டில் 4 மிகப் பெரிய சூரிய மின்சக்தி ஆலைகள் தொடங்கப்படும். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தி்யாவும் இணைந்துள்ளது.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்துக்கு ரூ7 ஆயிரம் கோடி, சுகாதாரத்துறைக்கு ரூ33,725 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உணவு தானிய உற்பத்தி இதுவரை இல்லாத சாதனையாக 26 கோடி டன்னை எட்டியுள்ளது. சர்வதேச பொருளாதார மந்த நிலையிலும் நாட்டின் ஏற்றுமதி 6.3 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. சென்னை- பெங்களூரை இணைக்கும் சரக்கு போக்குவரத்துக்கான ஆய்வுப் பணி நடக்கிறது.

இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+