ஆஹா.. இதைவிட பெரிய பரிசு இருக்குமா? உயிரை காப்பாற்றிய வீரர்களுக்கு தொழிலாளர்கள் கொடுத்த அந்த பொருள்!
உத்தர்காசி: உத்தரகாகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர். இந்த அசாத்திய வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. மீட்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களை மீட்ட மீட்பர்களுக்கு கொடுத்த பரிசு, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலையில், உத்தர்காசி அருகே சில்க்யாரா பகுதியில் நடைபெற்று வந்த சுரங்கப்பாதை பணியின் போது சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. 4.5 கி.மீ நீள சுரங்கப்பாதையில் 205 முதல் 260 மீட்டர் வரையிலான பகுதி இடிந்தது. இதனால் 260 மீட்டருக்கு அப்பால் இருந்த தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கக்கொண்டனர். 17 நாட்களாக சுரங்க இடிபாடுகளுக்கு நடுவே சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நவம்பர் 28ஆம் தேதி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

17 நாள் உயிர்ப் போராட்டம்: அதிநவீன இயந்திரங்களுடன் வெளிநாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் என அனைவரின் அசாத்தியமான உழைப்பும், 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் கண் துஞ்சாது ஈடுபட்டன. ஆகர் என்ற உயர் தொழில்நுட்ப துளையிடும் இயந்திரம் கடைசி நேரத்தில் பழுதடைந்தது. கடைசியில், எலி வளை சுரங்க நிபுணர்கள் என்று அழைக்கப்படும், சிறிய கருவிகளின் உதவியால் துளையிடும் வல்லுநர்கள் கிடைமட்டமாக துளையை ஏற்படுத்தி, தொழிலாளர்களை மீட்டெடுப்பதை உறுதி செய்தனர்.
தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் கயிற்றில் கட்டப்பட்ட சக்கர ஸ்ட்ரெச்சர்களின் உதவியுடன் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை ஒவ்வொருவராக மீட்டனர். 80 மீட்டர் விட்டம் கொண்ட குழாய் பாதை வழியாக தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரும் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூப்பர் ஹீரோக்கள்: உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் ஆகியோர், 17 நாள் தொடர் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்று அவர்களுடன் உரையாடினர். வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரும் ஆம்புலென்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு குறைந்தது ஒருநாள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் காப்பாற்ற எலி வளை துறையிடும் முறையில் இடிபாடுகளை அகற்றும் கடினமான பணியை இரவு பகலாக விரைந்து மேற்கொண்டு, அனைவரையும் உயிரோடு மீட்பதில் உறுதியோடு நின்று செயல்பட்ட மீட்புப் பணியாளர்களை ஒட்டுமொத்த நாடும் ஹீரோக்களாக கொண்டாடி வருகிறது.
அந்த புன்னகை: மூச்சு விடுவதற்குக்கூட சவாலான குகை போன்ற குறுகலான இடத்தில் எலிவளை துளையிடல் முறையில் தேர்ச்சி பெற்ற வல்லுநர்கள் இரவு பகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். உள்ளே இருக்கும் தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, உயிரைக் கொடுத்துப் பணியாற்றிய எலி வளை நிபுணர்களின் அத்தனை கஷ்டமும், மீட்கப்பட்ட தொழிலாளர்களின் முகத்தைப் பார்த்ததும் பனிபோல் மறைந்தது.
17 நாள் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட தொழிலாளர்கள், நன்றிப் பெருக்கில், மீட்புப் படையினரைக் கட்டித் தழுவினர். மேலும், மீட்புப் படையினருக்கு கொடுக்க எதுவுமே அற்ற அவர்கள், தங்கள் கையில் இருந்த பாதாம் பருப்புகளை கொடுத்துள்ளனர். "தொழிலாளர்கள் எங்களைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். அவர்கள் எங்களைக் கட்டிப்பிடித்து, பாதாம் பருப்பு வழங்கினர்" என்று மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தேவேந்திரா கூறியுள்ளார்.
பரிசாக கொடுத்த பொருள்: மீட்கப்பட்டவர்கள் நன்றியுடன் பரிசாக அளித்த அந்த பாதாம் பருப்புகள், அவர்கள் உள்ளே இருந்தபோது பைப் வழியாக அவர்களுக்கு உணவாகக் கொடுக்கப்பட்டவை. உள்ளே சிக்கிய தொழிலாளர்களுக்கு 6 இஞ்ச் பைப் மூலம் மிகுந்த சத்துள்ள பாதாம், முந்திரி, கொண்டைக்கடலை போன்றவையும், மருந்துகளும், மன நலம் காக்கும் விளையாட்டு பொருட்களும் அனுப்பப்பட்டன.
இன்னும் எத்தனை நாட்கள் உள்ளே இருப்போம், எப்போது மீட்கப்படுவோம் என்ற உறுதியே இல்லாத நிலையில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காத்திருந்த தொழிலாளர்கள், தங்கள் உயிரைக் காக்கும் உணவாக கருதியது பைப் மூலமாக வந்த அந்தப் பொருட்களைத்தான். அந்த உயிர் காத்த உணவைத்தான், தங்களை உயிருடன் மீட்ட வீரர்களுக்கு நன்றிப்பெருக்கில் பரிசாக வழங்கி கட்டியணைத்து நெகிழ்ந்துள்ளனர் தொழிலாளர்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications