முதலிரவில் நடந்த கொடூரம்... பிளேடால் அறுத்து புதுப்பெண்ணிற்கு சித்ரவதை!
ஆந்திரா மாநிலம் சித்தூரில் திருமணம் முடிந்து முதலிரவில் பெண் டாக்டரை கணவர் பிளேடால் கிழித்து சித்ரவதை செய்துள்ளார்.
Recommended Video

காளஹஸ்தி : ஆந்திரா மாநிலம் சித்தூரில் திருமணம் முடிந்த அன்றே முதலிரவில் பெண் டாக்டரை அவருடைய கணவர் பிளேடால் கிழித்து சித்ரவதை செய்ததோடு, அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கியும் உள்ளார்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் பகுதியை சேர்ந்த பெண் டாக்டருக்கும், அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 1-ந் தேதி திருமணம் நடந்தது. அன்று இரவே மணப்பெண்ணின் வீட்டில் வைத்து முதலிரவு சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்துள்ளது.
முதலிரவு அறைக்குள் சென்ற பின்னர் புதுமாப்பிள்ளை ராஜேஷ், மனைவிக்கு வாயில் துணியை வைத்து அடைத்து அவரின் உடல் பாகங்களை பிளேடால் அறுத்து சித்ரவதை செய்துள்ளார். இதோடு மணப்பெண் அடித்து துன்புறுத்தியும் உள்ளார் ராஜேஷ்.

ரத்தக் களறியாக வெளியே வந்த பெண்
முதலிரவு அறைக்கு சென்ற பின் சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்தபடியே அறையில் இருந்து வெளியே வந்து மயங்கி விழுந்துள்ளார். மணக்கோலத்தில் இருந்த பெண் ரத்த வெள்ளத்தில் வெளியே வந்ததை பார்த்து உறவினர்களும் பெற்றோரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

காட்டுமிராண்டி கணவன்
உடனடியாக பெண்ணை மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் கண்விழித்த புதுப்பெண் முதலிரவு அறைக்குள் கணவன் காட்டுமிரான்டித்தனமாக சித்ரவதை செய்ததை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

போலீசில் ஒப்படைப்பு
மணப்பெண் கூறிய தகவலை கேட்டு ஆத்திரம் அடைந்த அவரின் உறவினக்ரள் ராஜேஷை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து காவல்துறையினரிடம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். திருமணமான முதல் நாளே பெண்ணிற்கு ஏன் இந்த கொடுமையை அந்த கணவன் செய்தார் அவருக்கு ஏதேனும் மனநல பாதிப்பு இருக்கிறதா என்று விசாரணை நடைபெற்று வருகிறது.

அபாய கட்டத்தில் மணப்பெண்
இதனிடையே கடுமையான பாதிப்பிற்கு ஆளான புதுப்பெண் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications