5 ஆண்டுகள் தண்டனை பெற்றும் சிறைக்குப் போகாத சல்மான்! ட்விட்டர் சண்டைகள்!!
மும்பையில் குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பின்னர் 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் சல்மான் கான். இனி அவ்வளவுதான், சிறைக்குப் போய்விடுவார் சல்மான் என்றெல்லாம் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கு ஒரு ஆறுதலாக இரண்டுநாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது மும்பை உயர்நீதிமன்றம்.
சல்மான் கான் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது அவருக்கு 5 ஆண்டுகாலம் சிறை தண்டனை அறிவிக்கப்பட்ட உடன் சல்மானுக்கு ஆதராவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
|
ஒட்டிப் பிறந்த இரட்டையர்
சல்மான்கானுக்கு அறிவிக்கப்பட்ட தீர்ப்பினை கேட்ட உடன் பீகாரில் வசிக்கும் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரிகளான சபா மற்றும் ஃபரா ஆகியோர் சோகத்தில் ஆழ்ந்து விட்டனராம். உணவை கூட மறுத்துவிட்டதாக அவர்களின் தந்தை தெரிவித்தார். இவர்கள் இருவரும் சல்மான்கானின் ரசிகைகளாம்.
|
சாலை யாருக்கு
சாலை என்பது வாகனங்கள் செல்லவும் நாய் போன்ற விலங்குகள் செல்லவும்தான் மக்கள் தூங்குவதற்கு அல்ல. இது சல்மான்கானின் தவறு அல்ல என்று பதிவிட்டுள்ளார் அபிஜித் என்ற பாடகர். இது நேற்று பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது.
|
யார் தவறு
சாலையில் தூங்கியவர்கள் மீதுதான் தவறே தவிர குடித்துவிட்டு வண்டியோட்டியவர்கள் மீது தவறு அல்ல என்றும் அபிஜித் பதிவிட்டுள்ளார்
|
சட்டம் கடமையை செய்யும்
சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை நாலு மணிக்கு ஜாமீனாம் சட்டம் தன் கடமையை நல்லா செய்யுது என்று கேட்டுள்ளார் ஒரு வலைஞர்.
|
மக்கள் நடிகர்
சல்மான்கானுக்கு ஐந்து வருட சிறை தண்டனை மும்பை நீதிமன்றம் அறிவிப்பு. அப்போ எல்லாரும் அவரை "மக்கள் நடிகர்" என்று கூப்பிடுவார்களோ என்று கேட்டுள்ளார் ஒருவர்.
|
கடன் கொடுத்தீங்களோ?
சல்மான்கானுக்கு பெரிய சிறை தண்டனை கிடைக்கக்கூடாது என பிராத்திக்கிறேன் என்ற ஹேமமாலினியின் ட்விட்டருக்கு பலரும் ஏகமாய் கிண்டல் அடித்துள்ளனர்.

ஹன்சிகாவிற்கும் கிண்டல்
இதேபோல சல்மான்கானுக்கு 5 ஆண்டு தண்டனை என கேள்விப்பட்டதும் என் இதயமே நொறுங்கியது என்ற ஹன்சிகாவின் பதிவையும் கிண்டல் அடித்துள்ளனர். நீங்க வேணும்னா 5 வருடம் கூடவே போய் இருங்க என்றும் பதிவிட்டுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications