ரூ.2 கோடி லஞ்சம்.. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை! ஐபிஎஸ் அதிகாரி பரபரப்பு அறிக்கை
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறைத்துறை டிஐஜியான ரூபா, கர்நாடக டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு, சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.சத்யநாராயண ராவ் மற்றும் சிறை அதிகாரிகள் குறித்து குற்றம்சாட்டி எழுதியுள்ள அறிக்கை வடிவிலான 4பக்க கடிதத்தில்தான் இந்த தகவல்கள் உள்ளன.
சசிகலாவுக்காக சிறப்பு சமயலறை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் பகீர் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை இல்லை
இதுபோல சிறப்பு கிச்சன் அமைப்பது சிறை விதிமுறைகளுக்கு மாறானது. இதற்காக சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சத்யநாராயணராவ் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ஒரு வதந்தி சிறைத்துறையில் உலவுகிறது.

மெமோ கொடுத்தார்
நான் பணிக்கு சேர்ந்தது முதலே சத்யநாராயணராவ் எனது பணியில் இடையூறு செய்து வந்தார். நான் ஏன் பரப்பன அக்ரஹாரா சிறைக்குள் ஜூலை 10ம்தேதி சென்றேன் என்று விளக்கம் கேட்டு எனக்கு மெமோ கொடுத்தார். எனக்கு சிறையில் நடக்கும் மோசடிகளை விசாரிக்க அதிகாரம் உள்ளது.

நடவடிக்கை
நெருக்கடிகள் அதிகமாக உள்ளதால், நீங்கள் உடனடியாக இதில் தலையிட்டு, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருந்தவில்லை
சசிகலா அளவுக்கு அதிகமான நபர்களை சிறையில் சந்திக்க விதிமுறைகளை வளைத்து அதிகாரிகள் சலுகை காட்டுவதாக முன்பு செய்தி வெளியானது. பிறகு அதில் கொஞ்சம் கெடுபிடி காட்டுவதை போல காட்டிக்கொண்டனர் போலீசார். ஆனால், உள்ளுக்குள் இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது இப்போது அம்லமாகியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications