ஜெயலலிதா மரணம் - சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா வழக்கு
ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் பற்றி சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5 -ம் தேதி மரணம் அடைந்தார். 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை அறிக்கை தெரிவிக்கின்றது.

இருப்பினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கருதப்படுகிறது. தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை எம்.பி.சசிகலா புஷ்பா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், அப்பல்லோ மருத்துவமனை, தமிழக அரசு மற்றும் மத்திய அரசு ஆகியவை சார்பாக, முறையான விளக்கம் அளிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications