குருவாயூர் போல சபரிமலை கோயிலுக்கும் தனிச் சட்டம்.. கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Recommended Video
டெல்லி: குருவாயூர் கோயிலுக்கு உள்ளதை போல் சபரிமலை கோயிலுக்கும் தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை கோயிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ஆம் தேதி தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா அமர்வு அனைத்து வயதுடைய பெண்களும் சபரிமலை கோயிலினுள் அனுமதிக்கலாம் என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கேரள நாயர் அமைப்பு மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாற்றி உத்தரவிட்டார். எனினும் சபரிமலைக்கு அனைத்து பெண்களும் செல்லலாம் என்ற உத்தரவு தொடர்வதாக அந்த அமர்வு அறிவித்தது.
இதையடுத்து மண்டல பூஜையையொட்டி நடைத் திறப்பை அடுத்து ஏராளமான பெண்கள் சபரிமலைக்கு சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களை போலீஸார் திருப்பி அனுப்புகின்றனர். 12 வயது குழந்தையாக இருந்தாலும் அவரை போலீஸார் அனுமதிப்பதில்லை.
இந்த நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக நீதிபதி ரமணா முன்பு வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. அதில் குருவாயூர் உள்ளிட்ட கோயில்களை போல சபரிமலைக்கும் கோயில் நிர்வாகம் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தனிச்சட்டத்தை கேரள அரசு உருவாக்க வேண்டும்.
ஜனவரி 3-ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications