For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கில் திருப்பம்.. நிரபராதிகளுக்கு இழப்பீட்டு தொகை குறைக்கப்பட்டது

ராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தற்போது புதிய தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

டெல்லி: ராமநாதபுரத்தில் ஜோடிக்கப்பட்ட வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தற்போது புதிய தீர்ப்பு வழங்கி இருக்கிறது. இதில் நிரபராதிகளுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டு தொகை குறைக்கப்பட்டுள்ளது.

2012ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தோப்புவலசை என்று கிராமத்தில் வீடு ஒன்று கொளுத்தப்பட்டது.

நிலப் பிரச்சனை காரணமாக இந்த சம்பவம் நடந்தது. இதில் 6 பேர் மரணம் அடைந்தார்கள். 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள்.

எதிர்த்தார்கள்

எதிர்த்தார்கள்

ஆனால் இந்த ஐந்து பேரும் இந்த குற்றச்சாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்தார்கள். நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்கள். மேலும் எங்களுக்கும் மரணம் அடைந்தவர்களுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும் குறிப்பிட்டார்கள்.

வழக்கு ஜோடிப்பு

வழக்கு ஜோடிப்பு

இந்தநிலையில் இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து பேரும் நிரபராதிகள் என்றும் கூறப்பட்டது. இவர்கள் மொத்தமாக 93 நாட்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பணம்

பணம்

மேலும் இவர்களுக்கு 2 லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தமிழக போலீஸ் வழக்கை மோசமாக நடத்தி இருக்கிறது. இது மனித தன்மையற்ற செயல் என்று குறிப்பிட்டது.

குறைத்தார்கள்

குறைத்தார்கள்

இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது. அதன்படி தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் தற்போது ஏற்றுக்கொண்டு இருக்கிறது. அதன்படி இழப்பீட்டு தொகை 2 லட்சத்தில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

English summary
SC decreases compensation form 2 lakh to 10,000 for 5 Men in framed case in Ramanathapuram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X