4 இடங்களில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க கோரி வழக்கு- மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
டெல்லி: நாட்டின் நான்கு பகுதிகளில் உச்சநீதி மன்ற கிளை அமைக்க வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கில், ஆறு மாதங்களில் பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வசந்தகுமார் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

மக்களின் நலன் கருதி, உச்ச நீதிமன்றத்தின் கிளைகளை முக்கிய நகரங்களில் தொடங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் 1986-ம் ஆண்டு கூறியுள்ளது. மத்திய சட்டக் குழுவின் 229-வது அறிக்கையி லும், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என்று நான்கு பிராந்தியங்களில் உச்ச நீதிமன்றம் கிளை அமைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு கோரிக்கை அளித்தோம். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3,500 கி.மீ. பரந்து விரிந்த இந்தியாவில் 18 அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. நூறுக்கும் மேற்பட்ட மொழி மாறுபாடுகள் உள்ளன. மொத்தம் 120 கோடி பேர் உள்ள இந்த நாட்டில் ஓர் உச்ச நீதிமன்றம் மட்டுமே உள்ளது.
நாட்டின் 24 உயர்நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் மட்டுமே மேல் முறையீட்டு அமைப்பாக உள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீதிபெற டெல்லி வந்து செல்ல பெரும் பண விரயம் ஏற்படுகிறது. இதனால், மனுதாரர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை நிர்ணயித்து நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற கிளையை நிறுவ மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இம்மனு தலைமை நீதிபதி தத்து, எஸ்.ஏ.பாப்தே, ஏ.எம்.சாப்ரே ஆகியோரடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. ‘மனுதாரர் கோருவதைப் போல், நான்கு பகுதிகளில் உச்ச நீதிமன்ற கிளைகள் அமைப்பது சாத்தியமா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசு ஆறு மாதங்களில் பதிலளிக்க வேண்டும்' என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications