மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி- தேர்வுகள், சேர்க்கை தேதிகளையும் அறிவித்தது சுப்ரீம்கோர்ட்!!
டெல்லி: அகில இந்திய பொது மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் நுழைவுத் தேர்வு மற்றும் 2-ம் கட்ட தேர்வுகள், மாணவர் சேர்க்கைக்கான தேதிகளையும் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ ஆராய்ச்சி மையங்களில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டி போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனால் கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு பறிபோய்விடும் என்று மாநில அரசுகள் சார்பில் எதிர்ப்பு உருவானது. இதையடுத்து, பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி வழக்கு தொடர்ந்தன.

மாறுபட்ட தீர்ப்பு
இந்த வழக்கு நீதிபதிகள் அல்தாமஸ் கபீர், விக்ரம்ஜித் ஜெயின், அனில்தவே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த டிவிஷன் பெஞ்சில் இருந்த அல்தமாஸ் கபீர், விக்ரம்ஜித் ஜெயின் ஆகியோர் தடை விதித்து உத்தரவிட்டனர். நீதிபதி அனில்தவே தடை விதிக்க மறுப்பு தெரிவித்து மாறுபட்ட தீர்ப்பை அறிவித்தார். இருந்தபோதிலும், மெஜாரிட்டி நீதிபதிகள் என்ற அடிப்படையில் கடந்த 2013 ஜூலை 18ல் நுழைவுத் தேர்வுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு சீராய்வு மனு
இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசும், இந்திய மருத்துவக் கவுன்சிலும், மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வுக்கு கடந்த 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் விதித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் சார்பில் தொடரப்பட்ட சீராய்வு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன பெஞ்ச் முன் நடைபெற்று வருகிறது.

நுழைவுத்தேர்வு தடை நீக்கம்
இந்த சீராய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ஏற்கனவே நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு அனுமதி கிடைத்தது.
மேலும் நுழைவுத் தேர்வு நடத்தும் நாள், தேர்வு விவரங்கள் அடங்கிய பட்டியலை இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மருத்துவக் கல்விக் கவுன்சில், மத்திய அரசு, சிபிஎஸ்இ ஆகியவற்றுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

நுழைவுத்தேர்வுக்கு அனுமதி
இன்றைய விசாரணையின் போது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு நடத்த சிறப்பு சட்டம் அமலில் இருப்பதால் 2007-ல் இருந்து தமிழகத்தில் நுழைவுத்தேர்வு நடத்துவதில்லை என வாதிடப்பட்டது.

மே 1 முதல் கட்ட தேர்வு
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகலில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வு நடத்த மத்திய அரசுக்கு அனுமதி அளித்தது.
அத்துடன் மே 1-ந் தேதி முதல் கட்ட தேர்வையும் ஜூலை 24-ல் 2-வது கட்ட தேர்வையும் நடத்த வேண்டும் என்றும் அனைத்து முடிவுகளையும் ஆகஸ்ட் 17-ந் தேதி வெளியிட்டு மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications