இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.. மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை
இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மடாதிபதி ஒருவர் கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
உடுப்பி: இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மடாதிபதி சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் கூறியதுள்ள கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. மேலும் இரு குழந்தைகள் சட்டம் என்பது இந்துக்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹரியாணாவில் உள்ள பாரத மாதா கோயிலின் சுவாமி கோவிந்ததேவ் கிரிஜி மகாராஜ் , கர்நாடக மாநிலம் உடுப்பியில் விஸ்வ இந்து பரிசத் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், அதிகபட்சம் ஒரு தம்பதிக்கு இரு குழந்தைகள்தான் என்ற சட்டத்தை அரசு அவர்களஅ மீது திணித்து வருகிறது.

நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டத்தை அமல்படுத்தும்வரை இந்துக்கள் 4 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் இந்துக்களின் மக்கள்தொகை ஏற்கெனவே குறைந்துவிட்டது.
இரு குழந்தைகள் சட்டத்தால் இந்துக்களை மட்டும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அவர்களுக்கு அந்த சட்டம பொருந்தாது. பசு பாதுகாவலர்கள் அமைதியை விரும்புபவர்கள்.
ஆனால் குற்றப் பின்னணியுடைய சிலர் இந்த அமைப்பின் போர்வையில் அதை தவறாக பயன்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். மடாதிபதியின் இந்த கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications