டிரான்ஸ்பர் கேட்ட பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. கர்நாடக சீனியர் அமைச்சர் மீது பரபரப்பு புகார்
பெங்களூர்: பணியிடமாற்றம் கேட்டு வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கலால்துறை அமைச்சர் எச்.ஒய்.மேட்டி (71 வயது) மீது தகவலறியும் உரிமை ஆர்வலர் ராஜசேகர் என்பவர் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது குற்றச்சாட்டு தொடர்பான வீடியோ காட்சி அடங்கிய சிடி தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ராஜசேகர் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் எச்.ஒய்.மேட்டியின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மிரட்டல்
அமைச்சரின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளது குறித்து ராஜசேகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் விஜயலட்சுமி தலைமறைவாகியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டை விஜயலட்சுமியின் கணவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

பெண் பேட்டி
கணவன்-மனைவி இடையிலான உறவில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்றும் என் மனைவிக்கும் அமைச்சர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கும் சம்பந்தமில்லை என்று் அவர் கூறினார். ஆனால், பாதிக்கப்பட்டதாக கூறும் பெண் நேற்று கன்னட செய்தி சேனல் ஒன்றுக்கு முகத்தை மூடியப்படி சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அமைச்சர் மீதான குற்றச்சாட்டை அவர் உறுதி செய்தார். கையை பிடித்து கிஸ் கொடுக்க அமைச்சர் முற்பட்டார் என்றும், செக்ஸ் பற்றி தன்னிடம் பேசியதாகவும் அந்த பெண் தெரிவித்தார். ஆனால் பின்னர் அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து பிரஸ் மீட் செய்தார். இதன்பிறகு அந்த குற்றச்சாட்டை அவர் மீண்டும் உறுதி செய்து பிரஸ் மீட் செய்தார்.

சித்தராமையா பேட்டி
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா, கூறுகையில், பாலியல் புகார் குறித்து அமைச்சர் எச்.ஒய்.மேட்டியிடம் நான் எந்த அறிக்கையையும் கேட்கவில்லை. அவர் என்னை சந்தித்துப் பேசவுமில்லை. அமைச்சர் மேட்டிக்கு எதிராகத் தன்னிடம் ஆதாரமிருப்பதாகக் கூறும் தன்னார்வலர் ராஜசேகர் அது தொடர்பான விடியோ அடங்கிய சிடியை வெளியிடவேண்டும். ஒருவேளை குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், எவ்வித தாமதமும் இல்லாமல் மேட்டி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதே வழக்கமாகிவிட்டது
கர்நாடக கலால்துறை அமைச்சர்கள் பாலியல் புகாரில் சிக்குவது வழக்கமாகிவிட்டது. எடியூரப்பா அமைச்சரவையில் கலால் துறை அமைச்சராக பதவி வகித்த ரேணுகாச்சாரியா, நர்ஸ் ஜெயலட்சுமி என்பவருக்கு லிப் கிஸ் கொடுத்த காட்சி மீடியாக்களில் வெளியானது. பெண்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications