"மகாராஷ்டிராவின் எதிரிகள்." - பாஜக தலைவர்கள் மீது சிவசேனா பாய்ச்சல்!!
மும்பை: 25 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொண்ட பாஜகவின் தலைவர்களை "மகாராஷ்டிராவின் எதிரிகள்" என்று சிவசேனா கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் எழுந்த சிக்கலால் பாரதிய ஜனதா -சிவசேனா கூட்டணி முறிந்து போனது. கால் நூற்றாண்டு கால கூட்டணி முறிந்து போனாலும் சிவசேனாவை எதிரியாக கருதமாட்டோம் என்று பாஜக கூறியிருந்தது.

இதுபற்றி சிவசேனாவின் சாம்னா நாளேட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
பாஜக-சிவசேனா கூட்டணி நீடிக்க வேண்டும் என்று 11 கோடி மகாராஷ்டிரா மக்கள் விரும்பினார்கள். ஆனால் கூட்டணியை உடைத்து மகாராஷ்டிரா மக்களின் உணர்வுகளுக்கு எதிரான எதிரிகளாக மாறிவிட்டார்கள்.
கூட்டணியை முறித்துக் கொண்டது என்பது சம்யுக்தா மகாராஷ்டிரா பேரியக்கத்தின் 105 மராத்திய மாவீரர்களுக்கு நிகழ்த்தப்பட்ட அவமானம். இந்துத்துவா கொள்கைக்காக மட்டுமே 25 ஆண்டுகாலம் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தோம். அது முறிந்து போனது துரதிர்ஷ்டவசமானது.
பாஜக மற்றும் இதர கட்சிகளுடனான கூட்டணி நீடிக்க வேண்டும் என்பதற்காக சிவசேனா கடைசிவரை முயற்சித்தது. கடவுள் துல்ஜா பவானியின் விருப்பங்களே அடுத்தடுத்து அரங்கேறும்.
அரசியல் கூட்டல் கழித்தல்களுக்கு அப்பால் மகாராஷ்டிராவின் எதிர்காலம்தான் முதன்மையானது. நேற்று வரை நம்முடைய முகாம்களில் வழிபாடு நடத்தியவர்கள் இன்று மற்றொரு முகாமுக்குப் போய் தொழுகை நடத்துகிறார்கள்.
மகாராஷ்டிராவைப் பற்றி காங்கிரஸ் மற்றும் அதன் தலைவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த மண்ணை சிவசேனா காப்பாற்றும். நமது கூட்டணியை விட்டு விலகிச் சென்றவர்கள் விரைவில் அதன் விளைவுகளை உணருவார்கள்.
இவ்வாறு சாம்னாவில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
"என்னை விட்டுருங்க.. "விமானப்படை வீரரின் மனைவி பலாத்காரம்.. கட்டாயப்படுத்தி மதமாற்றம்! பகீர் சம்பவம் -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
ஸ்விட்ச் ஆப் ஆன செல்போன்கள்.. தாக்கரேவை புறக்கணித்த தலைவர்கள்.. மீண்டும் உடையும் சிவசேனா? -
மம்தாவை போல் உத்தவ் தாக்கரேவிற்கு அடுத்த அடி.. பாஜக பக்கம் போகும் 5 எம்பிக்கள்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications