உ.பி.கோவிலில் வானில் இருந்து கொட்டிய ரூ.500 நோட்டுகள்: ஓடியோடி எடுத்த பக்தர்கள்
ஆக்ரா: உத்தர பிரதேசத்தில் உள்ள பாங்கி பீகாரி கோவிலில் புத்தம் புதிய ரூபாய் நோட்டுகள் மழையாக பெய்ததை பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டனர்.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவனில் உள்ளது பாங்கி பீகார் கோவில். அந்த கோவிலில் கடந்த வாரம் திடீர் என்று கோபுரத்தின் உச்சியில் இருந்து
புத்தம் புதிய 500 ரூபாய் நோட்டுகளாக பறந்து வந்து தரையில் விழுந்தது. இதை பார்த்த பக்தர்கள் அதிசயித்தனர்.

பின்னர் கோவில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் ஓடியோடி 500 ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். என்ன அதிசயம், பண மழை பெய்கிறதே என்று அனைவரும் வியந்தனர். பின்னர் தான் உண்மை தெரிய வந்தது.
மும்பை போரிவாலி பகுதியைச் சேர்ந்த ஹேம்வதி சொன்கார்(50) என்ற பெண் ஆக்ரா, மதுரா, விருந்தாவன் ஆகிய இடங்களுக்கு சுற்றுலா வந்துள்ளார். அவர் தனது
கைப்பையில் ரூ.1.5 லட்சம் ரொக்கம் வைத்திருந்திருக்கிறார். அந்த பையை கோவில் வளாகத்தில் இருந்த குரங்கு பறித்துச் சென்று மரத்தின் உச்சியில் அமர்ந்து ரூபாய் நோட்டுகளை எடுத்து பறக்கவிட்டுள்ளது.
மரக்கிளைகள் குரங்கை மறைத்துவிட்டதால் மக்கள் வானில் இருந்து பணம் கொட்டியதாக நினைத்துவிட்டனர். அந்த கோவிலில் நூற்றுக்கணக்கான குரங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications