ஹெலிகாப்டரில் திடீர் தீ: கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிருஷ்டவசமாக தப்பினார்
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா பயணித்த ஹெலிகாப்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகும் முன்பு, விபத்து கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சில நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பெங்களூருவில் இருந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, இன்று காலை ஹெலிகாப்டரில் மைசூர் புறப்படுவதாக இருந்தது.

இதே ஹெலிகாப்டரில் முதல்வருடன், உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜும் மைசூர் செல்வதாக இருந்தது. எனவே ஹெலிபேட் சென்ற முதல்வரும், அமைச்சரும், ஹெலிகாப்டரில் ஏறி அமர்ந்தனர். ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகுவதற்கு சில வினாடிகளே பாக்கியிருந்த நிலையில், இன்ஜினில் தீ பரவியதை பைலட் கவனித்துள்ளார்.

உடனடியாக, ஹெலிகாப்டர்களுக்குள் இருந்த முதல்வரும், அமைச்சரும் கீழே இறக்கிவிடப்பட்டனர். தீ விபத்து சரி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் டேக்-ஆப் ஆகும் முன்பு விபத்து கண்டுபிடிக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சாலை மார்க்கமாக சித்தராமையா மைசூரு புறப்பட்டுச் சென்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications