நாட்டின் மிகப் பெரிய தொகுதியான மல்கஜ்கிரியில் 30-ந் தேதி வாக்குப் பதிவு
ஹைதராபாத்: நாட்டின் மிகப் பெரிய லோக்சபா தொகுதியான தெலுங்கானாவின் மல்கஜ்கிரியில் வரும் 30-ந் தேதி வாக்குபதிவு நடைபெற உள்ளது.
தெலுங்கானாவில் இருக்கிறது மல்கஜ்கிரி. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 30 லட்சம் பேர். இதுதான் நாட்டின் மிகப் பெரிய தொகுதி.

இத்தொகுதி ஹைதராபாத், செகந்திரபாத், மேடக் மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இத் தொகுதியின் தற்போதைய எம்.பியாக உள்ள மத்திய அமைச்சர் சத்யநாராயணா மீண்டும் மூன்றாவது முறையாக இத்தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த காங்கிரஸ் தலைவர் தினேஷ் ரெட்டி, ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் பி.வி.,நரசிம்மராவின் பேரன் சுதா கிரண், தெலுங்குதேசம் சார்பில் மல்லாரெட்டி, லோக்சத்தா சார்பில் ஜெய்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் வேட்பாளர்களாக உள்ளனர். தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. மயினம்பள்ளி ஹனுமந்த ராவும் போட்டியிடுவதால் மொத்தம் 6 முனைப் போட்டி நிலவுகிறது.
தெலுங்கானாவில் இப்பகுதி இருப்பினும் 40% சீமாந்திராவுடனும் இருக்கிறது. இதனால் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை சீமாந்திரா மக்களின் பாதுகாப்பு மற்றும் வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து பிரசாரத்தில் வாக்குறுதிகளை வாரி இறைத்துள்ளன.
இத்தொகுதியில் வரும் 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. 6 முனைப் போட்டி என்பதால் முடிவு யாருக்கு என்பதில் தீர்மானிக்க முடியாத அளவுக்கு இத்தொகுதி நிலவரம் இருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications