கொடூரம்! கணவர் கண் முன்னே இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த 6 பேர்! வெலவெலத்து போன கிராமம்
ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அரங்கேறிய பாலியல் வன்புணர்வு சம்பவம் அம்மாநிலத்தையே அதிரச் செய்வதாக உள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப ஆண்டுகளில் அதிகரித்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதிலும் பாலியல் புகார்கள் சமீப ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரித்து உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே ஜார்கண்ட் மாநிலத்தில் பகோரியா-பால்வாஹி என்ற கிராமத்தில் அரங்கேறி உள்ள கூட்டுப் பாலியல் பலாத்கார சம்பவம் அந்த மாநிலத்தையே அதிரச் செய்வதாக உள்ளது.

ஜார்கண்ட்
ஜார்கண்ட் மாநிலம் பலாமுவில் உள்ள பகோரியா- பால்வாஹி கிராமத்தில் 22 வயது பெண் ஒருவர் தனது கணவர் முன் ஆறு பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இது தொடர்பாக போலீசார் பகோரியா கிராமத்தைச் சேர்ந்த போலா ராம் மற்றும் தர்மேந்திர ராம் ஆகிய இருவரைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைக் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

சண்டை
அந்த பெண்ணின் கணவர் தான் போலீசாரை தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து புகார் அளித்து உள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்ததாகக் கூறப்படுகிறது. சுதா என்ற கிராமத்தில் அவர்கள் முதலில் இருந்து உள்ளனர். அங்கு மாமியாருடன் சண்டை ஏற்பட்டதால் அந்த பெண் கோபித்துக் கொண்டு அருகே உள்ள ரேவத் கிராமத்தில் உள்ள தனது தாய்வீட்டிற்கு நடந்தே செல்ல தொடங்கினார்.

கணவர்
அன்று மாலை பெண்ணை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல கணவர் வீட்டில் இருந்து உறவினர்கள் வந்துள்ளனர். இருப்பினும், அந்த பெண் தன் மாமியார் வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. கோபம் குறையும் வரை அந்த பெண் தாய் வீட்டில் இருக்கட்டும் என முடிவு செய்த அவர்கள், தாய் வீட்டில் பத்திரமாக விட்டு வர அவரது கணவரையும் உடன் அனுப்பி உள்ளனர். இதையடுத்து மைத்துனர் நரேஷ் குமாருடன் மூவரும் பகோரியா கிராமத்தில் உள்ள அந்த பெண்ணின் தாய் வீட்டிற்குச் சென்று உள்ளனர்.

கூட்டுப் பலாத்காரம்
இரவு சுமார் 8 மணி அளவில் அவர்கள் கிராமத்தை அடைந்த போது, திடீரென அவர்களை மறித்த 6 பேர் அவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் மொபைல் போன்களை பிடுங்கி உள்ளனர். அவர்கள் சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல் அந்த பெண்ணின் கணவரையும் நரேஷ் குமாரையும் பிடித்துக் கொண்டனர். அதன் பின்னர், கணவர் முன்னிலையிலேயே அந்த பெண்ணை கூட்டுப் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த கொடூரம் 4 மணி நேரம் நடந்துள்ளது.

கிராம மக்கள்
அதன் பின்னர் கணவரை அங்கேயே விட்டுவிட்டு, அந்த பெண்ணையும் மைத்துனர் நரேஷ்குமாரையும் அவர்கள் கட்டாயப்படுத்தி பைக்கில் ஏற்றி வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது செல்லும் வழியிலேயே அந்த பெண் கத்தி கூச்சல் போட்டு உள்ளார். இதில் பைக் ஓட்டி சென்றவன் நிலை தடுமாறி கீழே விழுந்து உள்ளான். அதற்குள் கிராம மக்களும் அங்குத் திரண்டு உள்ளனர்.

நடவடிக்கை
அங்கே கிடந்த இரு குற்றவாளிகளைப் பிடித்து கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கி உள்ளனர். மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதற்குள் அந்த பெண்ணின் கணவரும் மாணிக்க போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்து உள்ளார். அதேபோல கிராம மக்களும் போலீசாருக்கு தகவல் தர இருவரைக் காவலர்கள் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மாயமான மற்றவர்களையும் தேடி வருவதாகத் தெரிவித்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications