தமிழக மீனவர்களின் படகுகளை விரைவில் இலங்கை விடுவிக்கும்- சாமி தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை விரைவில் விடுவிக்கவுள்ளதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து சுப்பிரமணியம் சாமி கூறுகையில், இலங்கையிலிருந்து எனக்கு இப்போதுதான் தகவல் வந்தது. நான் கொடுத்த மீ்னவர்களின் படகுகள் குறித்த விவரத்தை பாதுகாப்புச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சே பார்த்து அதற்கேற்ப படகுகளை இலங்கை கடற்படை விரைவில் விடுவிக்கும் என தகவல் வந்துள்ளது என்று கூறியுள்ளார் சாமி.
பரவாயில்லை, இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையே நல்ல "பாலமாக"த்தான் செயல்படுகிறார் சாமி!












Click it and Unblock the Notifications