சந்தேக புத்தியால் கூட இருந்தவர்களையே போட்டுத்தள்ளிய சோட்டா ராஜன்.. புலம்பும் கூலிப்படையினர்
மும்பை: நிழலுலக தாதா சோட்டா ராஜன் சுயநலவாதியென்றும், யார் என்ன சொன்னாலும் சந்தேகப்பட்டு கூட இருந்தவர்களையே கொலை செய்தவர் என்றும் நிழலுலக வட்டாரங்கள் கூறுகின்றன.
நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமிடமிருந்த தொடர்பை துண்டித்து 1995ல் சோட்டா ராஜன் தனி சாம்ராஜ்யம் உருவாக்கினார். இதனால் தாவூத் ஆட்களால் தனது உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படும் என்ற முன்னெச்சரிக்கை உணர்வோடே சோட்டா ராஜன் சுற்றித்திரிந்தார்.

கூட இருந்தவர்களை
அதிகப்படியான எச்சரிக்கை உணர்வு, காண்போர் மீதெல்லாம் சந்தேகத்தை உருவாக்கியது. இதனால், சோட்டா ராஜன் தனக்கு நெருக்கமாக இருந்த ஓபிசிங், மோகன் கோடியன், பாலா கோடியன், பாரத் நேபாளி மற்றும் சாமுவேல் ஆகியோரை பினிஷ் செய்துள்ளார்.

பத்திரிகையாளர் கொலை
இரு வருடங்கள் முன்பு நடைபெற்ற பத்திரிகையாளர் ஜேடே கொலை வழக்கில் சோட்டா ராஜனுக்கு தொடர்புள்ளது. அந்த பத்திரிகையாளரும் சோட்டா ராஜன் பற்றிய தகவல்களை தாவூத் வலதுகரமாக உள்ள சோட்டா ஷகீலுக்கு தெரிவித்த சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்டவர்தான்.

விசாரணையில்லை
சோட்டா ராஜனிடம் யாராவது ஒருவரை பற்றி புகார் சொன்னால், கோள்மூட்டினால், அதுகுறித்து உண்மையை ஆராயாமலே கொலை செய்துவிடுவது வழக்கமாம். இதனால் அவரை நம்பி தாவூத் குரூப்பில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் உயிரை கையில் பிடித்தபடி வலம் வந்துள்ளனர்.

ஏமாற்றிவிடலாம்
இப்படித்தான் ஒருமுறை இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ரியாஸ் பத்கலை கொன்றுவிட்டதாக கூறிய தனது அடியாளுக்கு, பல கோடி பணம் கொடுத்து அனுப்பியுள்ளார் சோட்டா ராஜன். பின்னர், ரியாஸ் பத்கலை தான்தான் ஆட்களை வைத்து கொன்றதாக பகிரங்கப்படுத்தவும் செய்துள்ளார். ஆனால், உண்மையிலேயே ரியாஸ் பத்கல் கொலை செய்யப்படவில்லை என்பது சோட்டா ராஜனுக்கே பிறகுதான் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications