கர்நாடக தேர்தல் வெற்றி மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும்... சோனியாகாந்தி!
காங்கிரஸ் கட்சியினர் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
டெல்லி : காங்கிரஸ் கட்சியினர் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று அந்தக் கட்சியின் மூத்தத் தலைவர் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டுள்ளார். கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படும் விதம் மாற்று அரசியல் பாதைக்கு வழிவகுக்கும் என்றும் சோனியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பேசியதாவது : இக்கட்டான காலகட்டத்தில் ராகுல்காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் இதற்காக முதலில் ராகுல்காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். காங்கிரஸ் என்பது ஒரு மாபெரும் இயக்கம், காங்கிரஸ் கட்சியின் வெற்றி தேசத்தின் வெற்றி, நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் கிடைத்த வெற்றி.

40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திராகாந்தி சிக்மங்களூர் தொகுதியில் ஏற்படுத்திய மாபெரும் வெற்றி இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் அத்தகைய திருப்புமுனை வெற்றி தேவைப்படுகிறது. காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்து வருகிறது என்பதை கருதியே நான் அரசியலுக்கு வந்தேன் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.
கட்சிக்காக கடினமாக உழைத்தவர்களை நான் இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு இருட்டடிப்பு செய்து வருவது வருத்தமளிக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் இந்த அராஜக அரசு காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பதை தவிர வேறு எந்த நல்ல விஷயத்தையும் செய்துவிடவில்லை.
காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய நேரமிது. கர்நாடக சட்டசபை தேர்தலில் நாம் செயல்படும் விதம் நம்மை மாற்று அரசியல் பாதைக்கு அழைத்து செல்லும். நாட்டு மக்கள் காங்கிரஸ் கட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் சோனியா காந்தி கூறியுள்ளார்.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications