தோழியை அடித்து நொறுக்கிய கிரிக்கெட் வீர் அமித் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு
பெங்களூர்: கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா பெண் ஒருவரை தாக்கியதற்காக அவர் மீது பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக இந்திய அணிக்கு கடந்த செப்டம்பர் மாதம் பெங்களூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பெங்களூர் ஹோட்டலில் பெண் ஒருவருடன் தங்கியுள்ளார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அமித் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். இதையடுத்து அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் அமித் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக 7 நாட்களுக்குள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு போலீசார் அமித் மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த மாதம் 25ம் தேதி அமித் அந்த பெண்ணை தாக்கியுள்ளார். கடந்த 27ம் தேதி அமித் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை போலீசார் ஆய்வு செய்ய உள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடி வரும் இந்திய அணியில் அமித் கடந்த 19ம் தேதி சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications