உயிரோடு புதைக்கப்பட்ட இளைஞர்.. காப்பாற்றிய தெருநாய்கள்.. நடந்தது என்ன?
ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் நிலத்தகராறில் 4 பேரால் தாக்கப்பட்டு உயிருடன் புதைக்கப்பட்ட இளைஞரை தெருநாய்கள் இணைந்து மண்ணைத் தோண்டி காப்பாற்றியுள்ள சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இச்சம்பவம் குறித்து அந்த இளைஞர் அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவைச் சேர்ந்தவர் ரூப் கிஷோர் (24). இவர் தனது வீட்டில் இருந்தபோது கட்டாயப்படுத்தி 4 பேர் அழைத்து கடந்த ஜூலை 18ம் தேதி சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆக்ரோவின் அடோர்னி பகுதியில் ரூப் கிஷோருக்கும், அங்கித், கெளரவ், கரண், ஆகாஷ் ஆகிய 4 பேருக்கும் நிலப் பிரச்னை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், அந்த 4 பேரும் ரூப் கிஷோரை தாக்கி தங்களது பண்ணையில் உயிருடன் புதைத்துள்ளனர்.

இந்நிலையில், ரூப் கிஷோர் புதைக்கப்பட்ட இடத்தில் தெருநாய்கள் கூட்டம் சேர்ந்து மண்ணைத் தோண்டியுள்ளன. ரூப் கிஷோரின் சதைகளை நாய்கள் கடித்தபோது அவருக்கு நினைவு திரும்பியுள்ளது. இதையடுத்து, அந்தக் குழியில் இருந்து எழுந்த அவர், அப்பகுதி மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, ரூப்கிஷோர் அளித்த புகாரின்பேரில் ஆக்ரா போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள 4 பேரையும் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலத்தகராறில் இளைஞர் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாய்களின் மனிதநேயமிக்க இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications