15ம் தேதி அழுது கொண்டே தனியாக ஹோட்டலுக்கு வந்த சுனந்தா: சமாதானம் செய்த ஊழியர்கள்
டெல்லி: கடந்த 15ம் தேதி மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா அழுது கொண்டே தனியாக டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவரை ஹோட்டல் ஊழியர்கள் தான் சமாதானம் செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 17ம் தேதி இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அறை எண் 345ல் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக அவர் கடந்த 15ம் தேதி தனது கணவருடன் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லியில் இறங்கிய அவர் அழுது கொண்டே தனியாக லீலா பேலஸ் ஹோட்டலுக்கு முன்பதிவு எதுவும் செய்யாமல் வந்துள்ளார்.

அவரை சமாதானப்படுத்திய ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு அறை எண் 345-ஐ ஒதுக்கியுள்ளனர். பின்னர் வந்த தரூர் வேறு அறையில் தங்கியுள்ளார். சுனந்தா 16ம் தேதி முழுவதும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அன்றைக்கு அவர் கிச்சடி மட்டுமே ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் அதாவது 17ம் தேதி அன்னாச்சிப் பழம் மற்றும் இளநீர் ஆர்டர் செய்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் சுனந்தாவின் உடலில் காயம் இருந்ததை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் எங்கெங்கு காயம் இருந்தது என்பதை அவர்கள் வெளியிடவில்லை.
சுனந்தா மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் எடுத்திருந்தது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications