மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் செய்யாத மத்திய அரசு.. உச்சநீதிமன்றம் சாட்டையடி
மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் வசதிகள் செய்யாத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
பொது இடங்களை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வசதிகளை செய்து தரக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது, மாற்றுத் திறனாளிகள் பொது இடங்களைப் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கான சிறப்பு வசதிகளை செய்து தரப்படாததற்கு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டியது மத்திய அரசின் கடமை. மத்திய அரசாங்கத்தை நடத்துவது நீங்கள்தான். நீதிமன்றம் அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்களில் வசதிகளை ஏற்படுத்தித் தர உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ஆறு மாதங்களாகியும் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து இந்தியாவின் அனைத்து உயர் நீதிமன்றங்களின் பதிவாளர், செயலர்கள் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications