பணியிடத்தில் பாலியல் புகார்களை விசாரிக்க 10 பேர் குழு அமைத்தது உச்சநீதிமன்றம்!
Subscribe to Oneindia Tamil

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம் அமைத்துள்ள இக்குழுவில், மூத்த வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா, பீனா மாதவன், சுனிதா ராவ், உச்சநீதிமன்ற குமாஸ்தாக்கள் அமைப்பு பிரதிநிதி மது சௌகான், டெல்லி குழந்தைகள் நல மைய இணை இயக்குநர் பார்தி அலி, கூடுதல் பதிவாளர் ரச்னா குப்தா ஆகிய 7 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுர், மூத்த வழக்கறிஞர் எல். நாகேஸ்வர ராவ், பேராசிரியர் டாக்டர் ஜி. மதன்கோபால் ஆகிய 3 பேரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
பணியிடங்களில் எழும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை கையாள்வதற்கு விசாகா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்தது. அந்த நெறிமுறைகளின்படி, தற்போது குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications