For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போச்சு, ஜெயந்தி நடராஜன் லெட்டரை ஆராய்ச்சி பண்ண ஆரம்பிச்சுட்டாரு சாமி!

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் எழுதிய கடிதத்தை ஆராய்ந்து வருவதாக சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சோனியா காந்திக்கு ஜெயந்தி நடராஜன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பல தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுமாறு தன்னை நிர்ப்பந்தம் செய்ததாக கூறியிருந்தார்.

Swamy is examining Jayanthi letter for taking action against Rahul Gandhi

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயந்தி நடராஜன், தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடிதத்தில் கூறியிருந்த குற்றச்சாட்டுக்களை இன்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் தற்போது சாமி நுழைந்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் ஒரு டிவிட்டைப் போட்டுள்ளார். அதில், நான் ஜெயந்தி நடராஜன் கடிதத்தைப் படித்து வருகிறேன். அதில், "புத்து"வுக்கு (ராகுல் காந்தி) எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் 13வது பிரிவின் கீழ் ஏதாவது நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறேன் என்று கூறியுள்ளார் சாமி.

English summary
Subramaniam swamy has said in Twitter that, he is examining Jayanti letter from the point of view of Section 13 of the PCA to prosecute Rahul Gandhi for corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X