தமிழக விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க "மோடியுடன் சந்திப்பு" நாடகத்தை அரங்கேற்றிய டெல்லி போலீஸ்!
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள் இன்று திடீரென சாலையில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் இன்று திடீரென சாலையில் நிர்வாணமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிரதமரை சந்திக்க வைப்பதாக அழைத்துச் சென்று மனுவை மட்டும் பெற்றுக்கொண்டதால் ஏமாற்றமடைந்த தமிழக விவசாயிகள் சாலையில் நிர்வாணமாக உருண்டனர்.
தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் 28வது நாளாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் நூதன போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி வடமாநில அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தமிழக விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மனுவை மட்டும் பெற்று..
ஆனால் பிரதமர் மோடி இதுவரை விவசாயிகளை சந்திக்கவில்லை இந்நிலையில் பிரதமரை சந்திக்க வைப்பதாக 8 விவசாயிகளை அழைத்துச் சென்ற டெல்லி போலீஸ் அதிகாரிகள் அவர்களிடம் மனுவை மட்டும் பெற்றுக்கொண்டு அனுப்பியதாக தெரிகிறது.

நிர்வாணமாக உருண்டனர்
இதில் பெரும் ஏமாற்றமடைந்த விவசாயிகள் டெல்லி சாலையிலேயே நிர்வாணமாக உருண்டு பிறன்டனர். சாலையிலும் அங்கும் இங்கும் ஓடினர்.

மத்திய அரசுக்கு நெருக்கடி
இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விவசாயிகளை போலீசார் கைது செய்தனர். டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால் மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நயவஞ்சக செயல்தான்!
ஆகையால் தமிழக விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் உள்நோக்கத்துடன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு என்கிற நாடகத்தை டெல்லி போலீஸ் அரங்கேற்றியுள்ளது. இது உழைத்து போராடும் விவசாயிகளை வஞ்சிக்கும் நயவஞ்சக செயல்தான்!
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications