பெங்களூரில் பாலியல் தொழில்.. தமிழக அமைச்சரின் உதவியாளர் கைது
பெங்களூர்: பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறி, தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் பி.பாலகிருஷ்ண ரெட்டியின் நேர்முக உதவியாளர் சத்யா என்கிற சத்தியநாராயணா உள்பட 11 பேரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் பாகலூர் ஹட்கோ பகுதியை சேர்ந்தவர் சத்யா என்ற சத்தியநாராயணா (42). தமிழக கால்நடை துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் உதவியாளராக இருந்து வருகிறார். இவர், கர்நாடகாவில் உள்ள நண்பர்கள் சிலர் உதவியுடன், பெங்களூருவில் பானசவாடி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் பால்ஜி கவுடா என்பவருக்கு சொந்தமான 'ஹாப்பி எண்டிங்' என்ற பெயரில் பாடி டூ பாடி மசாஜ் சென்டர் என்ற ஒரு அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பெங்களூர் போலீசார் நேற்று அங்குள்ள தங்கும் விடுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல மாநிலங்களை சேர்ந்த பெண்களை வேலை தருவதாக கூறி அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த நான்கு பெண்களை மீட்டனர். அவர்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் தமிழ்நாடு கால்நடை துறை அமைச்சரின் உதவியாளர் சத்தியநாராயணா என்பவரும் ஒருவர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் 17 செல்போன்கள், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. .
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications