8ம் வகுப்பு மாணவனின் முடியை வெட்டிய உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் 8ம் வகுப்பு மாணவனின் முடியை வெட்டிய உடற்கல்வி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ளது நெடுமங்காடு. அந்த ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வரும் 13 வயது மாணவர் ஒருவர் தலைமுடியை நீளமாக வளர்த்துள்ளார். முடியை நீளமாக வளர்ப்பது பள்ளி விதிமுறைகளுக்கு எதிரானது அதனால் முடியை வெட்டிவிட்டு வா என்று உடற்கல்வி ஆசிரியை மாணவரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் மாணவர் முடியை வெட்டவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை உடற்கல்வி வகுப்பின்போது மாணவனின் முடியை வெட்டிவிட்டுவிட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து மாணவரின் தந்தை நேற்று போலீசில் புகார் கொடுத்தார். இந்நிலையில் முடியை வெட்டிய ஆசிரியையை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
போலீசார் விரைவில் ஆசிரியையிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்நிலையில் ஆசிரியை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications