மருத்துவம்தான் புதிய இந்தியாவின் சக்தி.. மன் கி பாத்தில் மோடி உரை!

இந்த மாதத்திற்கான மன் கி பாத் உரையை பிரதமர் மோடி இன்று நிகழ்த்தினார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த மாதத்திற்கான மன் கி பாத் உரையை பிரதமர் மோடி இன்று நிகழ்த்தினார். மருத்துவம்தான் புதிய இந்தியாவின் சக்தி என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி ரேடியோவில் பேசுவதை அதிகம் விரும்ப கூடியவர். எல்லா மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோவில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியில் அவருடைய கருத்துக்களை பேசுவார். சமயங்களில் இதில் முக்கியமான அறிவிப்புகளை கூட வெளியிடுவார்.

The medical field is the power of New India says Modi in Maan Ki Baat

இந்த மாதத்திற்கான உரையை இன்று காலை பேசினார். அதில் '' மருத்துவம்தான் புதிய இந்தியாவை உருவாக்குகிறது. அதுதான் நமது தேசத்தை பாதுகாக்கு சக்தி'' என்று குறிப்பிட்டார்.

மேலும் ''கொல்கத்தாவை சேர்ந்த சைதுல் லஸ்கர் என்று சிறு வாடகை கார் ஓட்டுனர்தான் இப்போது பெரிய மருத்துவமனையை நடத்தி வருகிறார். அவரது இறந்து போன தங்கைக்கு மருத்துவ வசதி கொடுக்க முடியாத வருத்தத்தை இப்போது மருத்துவமனை கட்டி தீர்த்துக் கொண்டு இருக்கிறார். அவர் பலருக்கு சேவை செய்து வருகிறார்.'' என்றுள்ளார்.

மேலும் ''புதிய இந்தியா இப்படிப்பட்ட சக்தியை மக்களுக்கு வழங்கி இருக்கிறது. 13 வருடங்களுக்கு முன் டிரைவராக இருந்தவர் இப்போது மருத்துவமனை நிறுவனர்'' என்றுள்ளார்.

மேலும் ''கான்பூரில் அஜித் மோகன் சவுத்தரி என்று மருத்துவர் நோயாளிகளுக்கு நடந்து சென்று மருத்துவம் பார்க்கிறார். இவரை போன்ற மருத்துவர்கள் நம் நாட்டிற்கு பெரிய சேவை செய்கிறார்கள்'' என்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+