நான் ஒரு 'கே' என்பதால் 3 மாதத்தில் 21 முறை எலக்ட்ரிக் ஷாக்: முதுகலை பட்டதாரி குமுறல்
டெல்லி: தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதால் தனக்கு 3 மாதத்தில் 21 முறை எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சை அளிக்கப்பட்டதாக டெல்லி பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெயரை தெரிவிக்க விரும்பாத அந்த முன்னாள் மாணவர் கூறுகையில்,
நான் டெல்லி பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் வகுப்பில் உள்ள ஒரு பையன் மீது எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நாங்கள் கல்வி சுற்றுலா சென்றோம். அப்போது ஒரே அறையில் நானும் அந்த பையனும் தங்கினோம். ஒரு நாள் இரவு நான் மது அருந்திவிட்டு அந்த பையனுடன் உடலுறவு வைத்துக் கொள்ள முயன்றேன்.

இதையடுத்து அந்த பையன் என் வீட்டுக்கே வந்து என் குடும்பத்தாரிடம் நடந்ததை தெரிவித்து என்னை அசிங்கப்படுத்திவிட்டான். என் சகோதரி ஒரு மனோதத்துவ நிபுணர். என்னை பெண்கள் மீது விருப்பமுள்ளவனாக மாற்ற நினைத்து என் சகோதரி என்னை முன்னணி மனோதத்துவ நிபுணரிடம் அழைத்துச் சென்றார்.
அந்த நிபுணர் என்னிடம் ஆணும், பெண்ணும் உறவு கொள்வது பற்றி பேசினார். எனக்கு பெண்களிடம் ஈர்ப்பே இல்லை என்று நான் தெரிவித்தேன். இதையடுத்து மூன்று மாதங்களில் எனக்கு 21 முறை எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சை அளித்தனர். இதனால் என் படிப்பு பாதிக்கப்பட்டது. நான் மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தேன்.
அதன் பிறகு நான் எப்பொழுது வெளியே சென்றாலும் எந்த பெண்ணை பார்த்தாய், அவரின் பெயர் என்னவென்று என் அம்மாவே என்னை கிண்டல் செய்யத் துவங்கினார். என் தாயே என் வலியை புரிந்து கொள்ளவில்லை எனில் நான் எதற்காக அவரின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்?
நான் தற்போதும் ஓரினச்சேர்க்கையாளனாகத் தான் இருக்கிறேன், இருப்பேன். நான் எந்த பெண்ணையும் திருமணம் செய்வது இல்லை என்ற முடிவில் இருக்கிறேன். திருமணம் செய்து ஒரு பெண்ணின் வாழ்க்கையை கெடுக்க விரும்பவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications