பஞ்சாப் முதல்வருக்கு கனடாவிலிருந்து வந்த கொலை மிரட்டல் வீடியோ! போலீசார் தீவிர விசாரணை
பஞ்சாப் மாநில முதல்வருக்கு கொலை வீடியோ வந்துள்ளதால் அவருக்கு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டு உள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநில முதல்வரை கொலை செய்யப்போவதாக வெளியான மிரட்டல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சி நடக்கிறது. மாநில முதல்வராக அமரீந்தர் சிங் உள்ளார். முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் லூதியானா தொகுதி எம்.பி.,யான ரவ்நீத் சிங்கிற்கும் எதிராகக் கொலை மிரட்டல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில் முதல்வர் அமரீந்தர் சிங்கையும், ரவ்நீத் சிங்கையும் கீழ்தர விமர்சித்து சிலர் பேசுகின்றனர். பின்னர் அவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். இந்த வீடியோக்கள் கனடாவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கனடா நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் இந்தியா வந்தபோது அவருக்கு தகுந்த மரியாதை அளிக்காததாலும், சீக்கியர்களுக்கு எதிராகவே செயல்பட்டு வந்ததாலும் வீடியோவில் உள்ள நபர்கள், முதல்வரை கொலை செய்ய போவதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்த வீடியோவின் பின்ணனியில் கனடா என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் காலிஸ்தான் தீவிரவாதியான பிந்தர்வாலேவின் புகைப்படமும், அந்த வீடியோ பிண்ணனியில் உள்ளது. இதனால், இந்த வீடியோ கனடாவில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
இது தொடர்பாக பஞ்சாப் போலீசார் வழக்கு பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications