Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா பாதிப்பால் மயங்கிய 2 வயது குழந்தை.. வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த "தெய்வம்"!

Subscribe to Oneindia Tamil

திருச்சூர்: கொரோனா பெருந்தொற்றால் அவதிப்பட்டு வந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து அவரை காப்பாற்றியுள்ளார் கேரளா நர்ஸ் ஒருவர். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் திருச்சூரில் நடந்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனாவின் முதல் அலை, இரண்டாவது அலை என கோர தாண்டவம் ஆடிவிட்டு தற்போது 3ஆவது அலையின் ஆரம்பக் கட்டத்தில் நம் தாய்நாடு இருக்கிறது.

முதல் அலையில் ஏராளமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். அது போல் இரண்டாவது அலையின் போது இந்தியாவில் உச்ச கட்ட பாதிப்புகள் அரங்கேறின.

மருத்துவமனை

மருத்துவமனை

நிறைய பேர் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் படுக்கை வசதிகள் கிடைக்காமல் பலர் அவதியடைந்தனர். மேலும் மூச்சுத்திணறலுடன் மருத்துவமனைக்கு வந்தவர்களுக்கு படுக்கை இருந்தும் ஆக்ஸிஜன் வசதி இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் பலர் உயிரிழக்க இந்த இரண்டாவது அலை காரணமாகிவிட்டது.

தயார் நிலை

தயார் நிலை

இந்த நிலையில் தற்போது 3ஆவது அலையின் தொடக்கத்தில் இருக்கிறோம் என்றும் அடுத்த 100 நாட்கள் கவனமாக கையாள வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பும், எய்ம்ஸ் மருத்துவமனை, ஐசிஎம்ஆர் உள்ளிட்டவை அறிவுறுத்தி வருகின்றன. அந்தந்த மாநிலங்களில் 3ஆவது அலையை சமாளிக்க மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருக்கின்றன.

சளி துளிகள்

சளி துளிகள்

கொரோனா பரவல் வந்தால் தொற்று வந்தவரின் சளி துளிகளோ எச்சிலோ அடுத்தவர் மீது பட்டால் அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்பிருப்பதால் முகக் கவசம் அணியுமாறும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கேரளா மாநிலம் திருச்சூரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

செவிலியராக பணியாற்றும் ஸ்ரீஜா

செவிலியராக பணியாற்றும் ஸ்ரீஜா

திருச்சூரை சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கார பஞ்சாயத்திற்குள்பட்ட குடும்ப நல மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று செவிலியர் ஸ்ரீஜா விடுமுறை என்பதால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது பெண் ஒருவர் மயங்கிய நிலையிலிருந்த 2 வயது குழந்தையை தூக்கிக் கொண்டு ஸ்ரீஜாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

அப்போது குழந்தையை பார்த்தவுடனேயே அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை ஸ்ரீஜா அறிந்து கொண்டார். உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு குழந்தையை அனுமதிக்க வேண்டும் என தாயிடம் ஸ்ரீஜா தெரிவித்துள்ளார். அவரும் குழந்தையை ஸ்ரீஜாவிடம் விட்டுவிட்டு தனது கணவருக்கு போன் செய்ய சென்றுவிட்டார். மூச்சுத்திணறலால் குழந்தை மயங்கியதையும் அறிந்த அவர் குழந்தைக்கு செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து என்பதையும் உணர்ந்தார்.

குழந்தையின் தந்தை

குழந்தையின் தந்தை

குழந்தையின் தாய், தந்தை வர தாமதமானதால் சற்றும் தாமதிக்காமல் குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசத்தை கொடுத்து முதலுதவி செய்தார். இது போல் அவர் தொடர்ச்சியாக செய்ததை அடுத்து குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பின்னர் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தையை மருத்துவமனைக்கு

குழந்தையை மருத்துவமனைக்கு

கொரோனா தொற்று பாதித்த குழந்தை என தெரிந்தும் தனக்கு தொற்று வந்தாலும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக குழந்தையின் வாயோடு வாய் வைத்து முதலுதவி அளித்த செவிலியர் ஸ்ரீஜாவை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். மருத்துவமனையிலும் குழந்தைக்கு தக்க நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால்தான் குழந்தை காப்பாற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அந்த குழந்தையுடன் தனது கணவரையும் ஸ்ரீஜா அனுப்பி வைத்திருக்கிறார்.

தனிமைப்படுத்திக் கொண்ட ஸ்ரீஜா

தனிமைப்படுத்திக் கொண்ட ஸ்ரீஜா

தற்போது அந்த குழந்தை நன்றாக இருக்கிறது. சிகிச்சை முடிந்து வீட்டுக்கும் வந்துவிட்டார். எனினும் இதுகுறித்து ஸ்ரீஜா கூறுகையில், எனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்பதாலேயே நான் குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்தேன். அது கை கொடுத்தது. குழந்தையின் உயிர்தான் எனக்கு முக்கியமாக தெரிந்தது. ஒரு உயிரை காப்பதை விட திருப்தியான காரியம் வேறு எதுவும் இல்லை என்றார். தற்போது ஸ்ரீஜா தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+